)
Ayali serial update: தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அயலிக்கு கபிலன் தான் மிஸ்டர் எக்ஸ் என்ற விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கபிலனுக்கு அவனது நண்பனிடம் இருந்து போன் வர அவன் கேங் குறித்து பேசி கொண்டிருக்க இந்திராணி இதை கேட்டு விட்டு என்ன என்று விசாரிக்கிறாள். மாஃபியா கும்பலில் இருக்கியா என்று கேட்க இல்லை என்று சொல்லி சமாளிக்கிறான்.
அதன் பிறகு ஊர்வலத்திற்கு கபிலன் ரெடியாகி வர ரித்திகா வேண்டுமென்றே என்ன டிரஸ் இது? யார் இதை தேர்வு செய்தது என்று பேசுகிறாள். செல்வராணி இதை கேட்டு கடுப்பாகி அங்கிருந்து நகர்கிறாள். கபிலனை சமாதானம் செய்யும் ரித்திகா இனிமே உன்னை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரேன் என்று முடிவெடுக்கிறாள்.
அடுத்து அயலி கபிலன் போனை பரிசோதனை செய்ய முடிவெடுத்து அவனிடம் சென்று என் போனில் சார்ஜ் இல்ல உங்க போன் கொஞ்சம் கொடுங்க என்று கேட்டு வாங்குகிறாள். ரித்விகா இதை பார்த்து போனை பிடிங்கி கபிலனிடம் கொடுத்து விடுகிறாள்.
இதற்கிடையில் கபிலன் போனில் வி என்ற எழுத்தில் ஒரு நம்பர் சேவ் ஆகி இருப்பதை கவனித்து விடுகிறாள். அடுத்து இந்திராணி உள்ளே வந்து கபிலனிடம் பேச ரித்திகா ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போது மேனஸ் இல்லாமல் உள்ள வரீங்க என்று கோபப்படுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ