)
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சமீபத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இழப்பு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. ரோபோ சங்கர் 47 வயதிலேயே உயிரிழந்ததற்கு அவரது குடிப்பழக்கம்தான் காரணம் என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அவரது நெருங்கிய நண்பரும் கலைஞருமான நாஞ்சில் விஜயன் ஒரு யூடியூப் சேனலில் பேசி உள்ளது பலரது மனதையும் உருக்கி உள்ளன.
அவர் பேசியதாவது, அவரது மறைவிற்கு மதுவும் ஒரு காரணம், ஆனால் அது மட்டுமே காரணம் கிடையாது. அவர் ரோபோவாக வேடம் போட்டபோது உடம்பில் பூசிக்கொண்ட பெயிண்ட், அவரது ஓயாத உழைப்பு என அனைத்துமே தான் அவருடைய உடல் பிரச்சனைக்கு காரணம். சில வருடங்களுக்கு முன்னர் ரோபோ சங்கர் மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டார். அவரது மனைவி பிரியங்கா போராடி அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டார். பின்னரும் அவருக்கு தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
ரோபோ சங்கர் மருத்துவமனையில் இருந்தபோது ரூ. 5 லட்சம் மேல் செலானது. பின்னர் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவ செலவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள். அவரது மகள் இந்திரஜா அணிந்திருந்த தாலி உட்பட அத்தனையையும் கழட்டி கொடுத்தார். அதேபோல் இந்திரஜாவின் கணவர் கார்த்திக்கும் அவர் கையில் இருந்த மோதிரம் உட்பட அனைத்து நகைகளையும் வைத்துதான் மருத்துவ செலவு செய்யப்பட்டது. அனைத்தையும் அருகில் இருந்து பார்த்தவன் நான். ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதால், அவர்களுக்கு எவ்வித கஷ்டமும் இல்லை என்று நினைத்துவிட கூடாது. அவரது குடும்பம் மிகப்பெரிய கடனில் சிக்கி இருக்கிறது என்று நாஞ்சில் விஜயன் மிகவும் விருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, நாஞ்சில் விஜயனிடம் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா ஆடியது பலரால் விமர்சிக்கப்பட்டதே என கேட்டதற்கு பதிலளித்த அவர், ரோபோ சங்கர் அண்ணனின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா ஆடியது வேதனையின் உச்சம். தனது கணவருக்கு பிடித்ததை அவர் கடைசியாக செய்தார் என அவர் கூறினார்.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். மாரி, வேலைனு வந்துட வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எவராலும் மறக்கமுடியாதவை. கடைசியாக அவர் தேசிங்கு ராஜா 2 படத்தில் நடித்திருந்தார். மேலும், சமீபத்தில் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ