)
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சைஃப் அலி கான் வீட்டில் கடந்த 16ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் புகுந்து திருட முயற்சித்துள்ளார். இதனை தடுத்த சைஃப் அலி கானை அந்த மர்ம நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
படுகாயம் அடைந்த சைஃப் அலி கான் ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 6 இரங்களில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அவருக்கு இரண்டு இடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து ஓய்வில் இருந்த அவர் கடந்த 21ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
கைதானவரின் கைரேகை பொருந்தவில்லை
இதற்கிடையில் கடந்த 18ஆம் தேதி இவரை கத்தியால் குத்திய நபர் முகமது ஹரிபுல் இஸ்லாம் என்பவரை போலீசார் தானே-வில் வைத்து கைது செய்தனர். அவர் இந்தியாவை சேர்ந்தவர் அல்ல. வங்கதேசத்தை சேர்ந்தவர் என்ற திடுக்கிடும் தகவல்கள் போலீசாரால் கூறப்பட்டது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக 19 செட் கைரேகைகள் போலீசாரால் சேகரிக்கப்பட்டன. ஆனால் ஒரு கைரேகை கூட கைதான ஹரிபுல் இஸ்லாம் கைரேகையுடன் ஒத்துப்போகவில்லை என்ற தகவல்கள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்டவரின் முகம் பொருந்தியதாக தகவல்
இந்த நிலையில், புதிய ஒரு தகவல் வெளியாகியுள்ளன. அதாவது சிசிடிவி காட்சிகளில் உள்ள குற்றவாளியின் முகத்துடன் கைது செய்யப்பட்ட முகமது ஹரிபுல் இஸ்லாமின் முகம் ஒத்துப்போவதாக மும்பை போலீசார் கூறுகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிசிடிவி காட்சிகளில் இருக்கும் நபரும் கைது செய்யப்பட்ட முகமது ஹரிபுல் இஸ்லாமும் ஒரே நபர் தான் என தெரிவித்துள்ளார்.
முகமது ஹரிபுல் இஸ்லாம் மீது 311, 312, 331(4), 331(6) மற்றும் 331(7) ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைப்பட்டுள்ளார்.
7 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கிறார்
குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் ஷெகானே கூறுகையில், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்ற ஆதரமும் போலீசாரிடம் இல்லை. 6 மாதங்களுக்கு முன்பாக அவர் இந்தியாவுக்கு வந்ததாக கூறுகின்றனர். அது தவறான அறிக்கை. அவர் 7 ஆண்டுகளுக்கு மேல் இங்கு வசித்து வருகிறார். அவரது குடும்பம் மும்பையில் உள்ளது. இச்சம்பவத்தில் தெளிவான விசாரணை ஏதும் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ