Samantha Ruth Prabhu With Raj Nidimoru: நடிகை சமந்தா தற்போது அபு தாபியில் ஜாலியாக ஓய்வு எடுத்து வருகிறார். அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ என வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
தென்னிந்தியாவின் நட்சத்திர நாயகியாக விளங்குபவர், நடிகை சமந்தா. பானா காத்தாடி படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களின் நடித்து ரசிகர்களின் மனங்களின் இடம்பெற்றார். தற்போது இந்திய அளவில் பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரை நட்சத்திரங்கள் சிலரை டேட்டிங் செய்த போதிலும், இவர் காதலில் விழுந்தது, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிடம்தான்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் ஜோடியாக நடித்த இவர்கள், அப்போது நல்ல நண்பர்களாக இருந்தனர். வருடங்கள் உருண்டோட, சில படங்களில் ஒன்றாக சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து, இவர்களுக்குள் இருந்த நட்பு நாளடைவில் பெரிய நெருக்கமாக மாறி, பின்னர் காதலுக்கு வழி வகுத்தது. சில ஆண்டுகள் காதலித்த பிறகு, இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பெரிய அளவில், நடந்த இவர்களின் திருமணம், 3 ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. 2021ஆம் ஆண்டில் இருவருமே பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர்.
நடிகை சமந்தா, தனது விவாகரத்து காலத்தில் மனமுடைந்து இருந்ததை அனைவராலும் கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால், தங்கள் திருமண வாழ்க்கையில் என்ன பிரச்சனை என்பது குறித்தோ, தாங்கள் ஏன் விவாகரத்து பெற்றனர் என்பது குறித்தாே இருவருமே வெளியில் பேசிக்கொள்ளவில்லை. இந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. இப்படி சமந்தாவின் வாழ்வில் அடிக்கு மேல் அடி விழ, அவர் சில மாதங்கள் திரையுலகில் இருந்து விலகி பிரேக் எடுப்பதாக அறிவித்தார். இதனால், அவர் இப்போது வரை எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார்.
இதனிடையே இவர் சமீபத்தில் சிட்டாடல்: ஹனி பனி தொடரில் பணியாற்றினார். இந்த தொடர் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது இவர் த்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இந்நிறுவனம் தயாரிப்பில் ‘மா இண்டி பங்காரம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று அறிவிக்கப்பட்டது. மேலும் அண்மையில் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக 'சுபம்' திரைப்படம் ரிலீஸ் ஆனது. இது சுமாரான விமர்சனத்தை பெற்றது.
சமந்தா, அண்மையில் ராஜ் நிடிமொரு என்கிற இயக்குநரை டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் சமீபத்தில் திருப்பதிக்கு ஒன்றாக சென்றதும், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒருவர் பக்கத்தில் ஒருவர் இருக்கும் புகைப்படங்களும் வைரலானது.
ராஜ் நிடிமொரு ஆந்திராவை சேர்ந்தவர். இவர், 2003ஆம் ஆண்டில் இருந்து திரையுலகில் ஆக்டிவாக இருக்கிறார். ஸ்ட்ரீ, 99 உள்ளிட்ட பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு அங்கமான இவர், சமந்தாவுடன் பல படங்களில் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியானது. ராஜ் நிடிமொரு ஆந்திராவை சேர்ந்தவர். இவர், 2003ஆம் ஆண்டில் இருந்து திரையுலகில் ஆக்டிவாக இருக்கிறார். ஸ்ட்ரீ, 99 உள்ளிட்ட பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு அங்கமான இவர், சமந்தாவுடன் பல படங்களில் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது வாழ்க்கையை என்ஜாய் செய்ய அபு தாபிக்கு ட்ரிப் சென்றுள்ளார் நடிகை சமந்தா. அங்கு பாலைவனத்துக்கு நடுவில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் சமந்தா தங்கி இருக்கிறார். அதன் புகைப்படங்களை சமந்தா வெளியிட்டு இருக்கும் நிலையில் அவை வைரல் ஆகி இருக்கின்றன. அதில் என்ன சிறப்பு என்றால் சமந்தாவின் கூலிங் கிளாசில் ஒரு நபரின் முகம் தெரிகிறது. அதனால் சமந்தா அவரது காதலர் உடன் தான் வெளிநாடு ட்ரிப் சென்று இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.
மேலும் படிக்க | எதிர்பார்ப்புகள் ஏமாற்றமா? தக் லைஃப் படம் எப்படி? X தள விமர்சனம்!
மேலும் படிக்க | இன்று வெளியான தக் லைஃப்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









