)
இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. திரைப்படங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இவர், தற்போது வெப் தொடர்களிலும் அதிக கவனம் செலுத்தி, தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
திரைப்படங்களைப் பொறுத்தவரை, இவர் சில புதிய படங்களை ஒப்புக்கொண்டுள்ளார், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிப்புத் துறையில் மட்டுமின்றி, சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் அவர் தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் மூலம், 'சுபம்' (Shubam) என்ற திரைப்படத்தை அவர் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படம் புதிய நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட திகில் நகைச்சுவைத் திரைப்படமாகும். சமந்தா தயாரித்த முதல் படம் என்ற வகையில், 'சுபம்' மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. அவர் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் 'ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்' (Tralala Moving Pictures) ஆகும்.
இந்நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் மனம் திறந்து பகிர்ந்த அதிர்ச்சி தகவல்கள் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அதில், " என் வாழ்க்கைப் பயணத்தில் நான் பல கடுமையான சவால்களையும், வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டிருக்கிறேன். நான் இக்கட்டான சூழலில் தவித்தபோது, சிலர் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். எனக்கு மயோசிடிஸ் என்ற கடுமையான நோய் தாக்கியபோது, அதைக்கூட கேலிப் பொருளாக மாற்றினர், என் விவாகரத்து நிகழ்வை உற்சாகமாக கொண்டாடினர். இந்த மனிதர்களின் செயல்கள் என் இதயத்தை ஆழமாக காயப்படுத்தின. இருப்பினும், மெல்ல மெல்ல, நான் அதைப் பற்றி கவலைப்படுவதை நிரந்தரமாக கைவிட்டுவிட்டேன்" என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
நடிகை சமந்தா, பிறப்பில் தெலுங்கு மொழி பேசுபவராக இருந்தாலும் நம்ம ஊரில் உள்ள பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவர்தான். சென்னையை சேர்ந்த இவர், மாடலிங் மற்றும் நடிப்பு துறைக்கு வந்த பிறகும் சில ஆண்டுகள் சென்னையில்தான் இருந்தார். அதன் பிறகு, நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு வேறு இடத்திற்கு மாறினார். அவரை விட்டு பிரிந்த பின்பு, மும்பையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. பாலிவுட் தொடர்களிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், அவர் அங்கேயே தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தாண்டி, இந்த வீட்டை அவர் மும்பையிலேயே வாங்கியிருக்கலாம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா, நாக சைதன்யாவை,கடந்த 2017 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவரும் 2021 ஆம் ஆண்டில் பிரிந்தனர். இதையடுத்து சிங்கிளாக இருந்த இவர், இப்போது திரைப்பட துறையில் இருக்கும் ராஜ் நெடிமொருவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
ராஜ் நிடிமொரு ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால், இப்போது தனது மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிட்டெல் தொடரில் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்த போது இவருக்கும் சமந்தாவிற்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அவர்கள் எங்கும் வெளியில் பேசவில்லை. இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ