)
Samantha Visited Tirupati Balaji Temple: இன்று நடிகை சமந்தா திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தென்னிந்தியாவின் நட்சத்திர நாயகியாக விளங்குபவர், நடிகை சமந்தா. பானா காத்தாடி படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களின் நடித்து ரசிகர்களின் மனங்களின் இடம்பெற்றார். தற்போது இந்திய அளவில் பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரை நட்சத்திரங்கள் சிலரை டேட்டிங் செய்த போதிலும், இவர் காதலில் விழுந்தது, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிடம்தான்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் ஜோடியாக நடித்த இவர்கள், அப்போது நல்ல நண்பர்களாக இருந்தனர். வருடங்கள் உருண்டோட, சில படங்களில் ஒன்றாக சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து, இவர்களுக்குள் இருந்த நட்பு நாளடைவில் பெரிய நெருக்கமாக மாறி, பின்னர் காதலுக்கு வழி வகுத்தது. சில ஆண்டுகள் காதலித்த பிறகு, இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பெரிய அளவில், நடந்த இவர்களின் திருமணம், 3 ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. 2021ஆம் ஆண்டில் இருவருமே பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர்.
நடிகை சமந்தா, தனது விவாகரத்து காலத்தில் மனமுடைந்து இருந்ததை அனைவராலும் கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால், தங்கள் திருமண வாழ்க்கையில் என்ன பிரச்சனை என்பது குறித்தோ, தாங்கள் ஏன் விவாகரத்து பெற்றனர் என்பது குறித்தாே இருவருமே வெளியில் பேசிக்கொள்ளவில்லை. இந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. இப்படி சமந்தாவின் வாழ்வில் அடிக்கு மேல் அடி விழ, அவர் சில மாதங்கள் திரையுலகில் இருந்து விலகி பிரேக் எடுப்பதாக அறிவித்தார். இதனால், அவர் இப்போது வரை எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார்.
இதனிடையே இவர் சமீபத்தில் சிட்டாடல்: ஹனி பனி தொடரில் பணியாற்றினார். இந்த தொடர் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது இவர் த்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இந்நிறுவனம் தயாரிப்பில் ‘மா இண்டி பங்காரம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று அறிவிக்கப்பட்டது. மேலும் அண்மையில் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக 'சுபம்' திரைப்படத்தின் டீஸர் வெளியானது. மேலும் இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமந்தா தற்போது பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருடன் டேட்டிங்கில் இருக்கிறார் என்ற கிசுகிசுக்கள் வந்தன, ஆனால் இது குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார் நடிகை சமந்தா. இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் திருப்பதிக்கு இவர் ராஜ் நிதிமோருடன் வந்து தரிசனம் செய்துள்ளார். அங்கு நடிகை சமந்தாவுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ