டிடி நெக்ஸ்ட் லெவல் ஓடிடி ரிலீஸ்! எதில், எப்போது பார்க்கலாம்? இதோ முழு விவரம்..

DD Next Level OTT Release Date : சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதனை எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்? இதோ விவரம்.

Written by - Yuvashree | Last Updated : Jun 10, 2025, 02:31 PM IST
  • ஹாரர் காமெடி படம் டிடி நெக்ஸ்ட் லெவல்
  • இதனை எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
  • இதோ விவரம்!
டிடி நெக்ஸ்ட் லெவல் ஓடிடி ரிலீஸ்! எதில், எப்போது பார்க்கலாம்? இதோ முழு விவரம்..

DD Next Level OTT Release Date : அதிரடி வெற்றித் திரைப்படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் மொழிகளில் பிரபல ஓடிடி தளம் ஒன்று ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. 

ஓடிடி ரிலீஸ்:

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களுள் ஒன்றாக இருக்கும் ZEE5, அடுத்ததாக அதிரடி வெற்றித் திரைப்படமான "டெவில்ஸ் டபுள்: நெக்ஸ்ட் லெவல், எனும் டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிடி வெற்றிப்பட வரிசையில், நான்காவது பாகமாக வெளியான "டிடி நெக்ஸ்ட் லெவல்" படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

எழுத்தாளர்-இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில், கலக்கல் நகைச்சுவை நாயகன் சந்தானம் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள்  இணைந்து நடித்துள்ளனர். 

கதை என்ன?

தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படம், அதிரடி-திகில்-நகைச்சுவை, ஜம்ப்-ஸ்கேர்ஸ், நையாண்டி மற்றும் ஸ்லாப்ஸ்டிக் ஆகிய ஜானர்களின் சுவாரஸ்யமான கலவையாக, அனைத்து வகை ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில்,  உருவாகியுள்ளது. இறந்துபோன திரைப்பட இயக்குநரின் பழிவாங்கும் எண்ணத்தால், ஒரு திரைப்படத்திற்குள்  சிக்கிக்கொள்ளும் விமர்சகன், அங்கு இருக்கும் டைரியின் சக்தியை மீறி, அந்த மாயாஜால சக்தியை மீறி,  ஜெயிக்கிறானா ? படத்திலிருந்து  வெளியில் வந்தானா? என்பது தான் இப்படத்தின் மையம். 

இறந்துபோன  திரைப்பட இயக்குநர்  ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட  திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படி வெளியில் வருகிறான் என்பது தான் இப்படத்தின் கதை.  

நடிகர் சந்தானம் இது குறித்து கூறியதாவது, "டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்த கிஸ்ஸா கதாப்பாத்திரம், சமீப காலங்களில் நான் ஏற்று நடித்ததிலேயே மிகவும் திருப்திகரமான கதாபாத்திரமாக்கும்.  கிஸ்ஸா தைரியமானவன், விசித்திரமான குணங்கள் நிறைந்தவன். கிஸ்ஸா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது மிகுந்த சவால் வாய்ந்ததாகவும், சந்தோசமான அனுபவமாகவும் இருந்தது. இப்போது இப்படம் ZEE5 மூலம் உலகமெங்குமுள்ள பார்வையாளர்களைச் சென்றடைவது மகிழ்ச்சி. நீங்கள் இதுவரை பார்த்த திரைப்படங்களைத் தாண்டி, இந்தப்படம் உங்களை அடுத்த லெவலுக்கு கூட்டிச் செல்லும்”

மேலும் படிக்க | டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

மேலும் படிக்க | அதுக்குள்ள ஓடிடியில் வெளியாகும் தக் லைஃப்? எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News