)
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B 62 ஸ்டுடியோஸ், ரன்வீர் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி திரில்லர் திரைப்படமான 'துரந்த ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஆதித்யா தர் (உரி:தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடித்துள்ளனர்.
Your hardwork, grit, talent, patience & journey is nothing short of a film in itself !This echoes your love for cinema & audience@AdityaDharFilms ! Congratulations Lokesh, Shiv, Ojas & team! Ranveer, Sanju sir, Akshaye sir, Maddy Sir, Arjun have outdone themselves#DHURANDHAR pic.twitter.com/srvT4T3Cxb
— Yami Gautam Dhar (@yamigautam) July 6, 2025
இரண்டு நிமிடம் 40 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் மர்மம் - துணிச்சல் - அதிரடி ஆக்சன் காட்சிகள் - ஆகியவை கலவையாக இடம்பெற்று கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இதற்கு ஷாஷ்வத் ஆற்றல்மிக்க இசையை வழங்கி இருக்கிறார். ஜாஸ்மின் சான்ட்லஸின் குரலும், புதிய யுக கலைஞரான அனுமான் கைன்ட்டின் சிறப்பு ஒத்துழைப்பும்.. பாடலுக்கு எதிர்பாராத வகையில் ஒரு தனித்துவத்தை அளித்திருக்கிறது. அவர்களது பிரத்யேகமான பாணியிலான இந்தப் பாடல், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படத்தை B 62 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதி தேஷ் பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆதித்யா தர் எழுதி இயக்கியிருக்கும் 'துரந்தர் ' திரைப்படம் - தெரியாத மனிதர்களைப் பற்றிய சொல்லப்படாத கதையை விவரிக்கிறது.
Was hyped since it’s Aditya Dhar’s film, and kind of a Ranveer's comeback. But damn, didn’t expect all the characters to look this dope. Super excited for #Dhurandhar pic.twitter.com/3ZTLCDiCrn
— Vishal (@vishalandcinema) July 6, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ