Alya Manasa New Serial: ஆலியா மானசா நடிக்கும் பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? இந்த புதிய தொடர் எவ்வளவு ஆச்சர்யங்களையும், சுவாரசியமான சம்பவங்களையும் கொண்டுள்ளது என்று பார்க்கலாம்!

Alya Manasa New Serial: தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் பாரிஜாதம்.
ஆலியா மானசா நாயகியாக நடிக்க உள்ள இந்த சீரியல் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதன் முதல் எபிசோடான இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஒரு பெரிய கோவில் காட்டப்படுகிறது. கிருஷ்ணன் ருக்மணி மற்றும் வர்ஷினி என மூவர் இந்த ஆட்டோவில் இருந்து இறங்குகின்றனர். ருக்மணி நூறு ரூபாய் கேட்ட ஆட்டோ டிரைவருக்கு 50 ரூபாய் தான் தருவேன் என்று வாக்குவாதம் செய்து பணத்தைக் கொடுக்கிறாள்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணன் வர்ஷினிடம் அக்கா எங்கே என்று கேட்க அக்கா உள்ள கோவிலில் தான் இருப்பா என்று சொல்கிறாள். கிருஷ்ணன் நாயகி இசையின் சித்தப்பா ருக்மணி அவளுக்கு சித்தி மற்றும் வர்ஷினி ருக்மணியின் மகள் என்பது தெரிய வருகிறது.
கோவிலில் இசை சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க அப்போது ஒரு குழந்தை திடீரென தவறி தண்ணீருக்குள் விழ யாரும் அதை கவனிக்காமல் இருக்க இசை ஓடிப்போய் குழந்தையை காப்பாற்றுகிறாள். நீங்க யாருக்கும் எந்த சத்தமும் கேட்கல அப்படி இருக்கும்போது நீ மட்டும் எப்படி காப்பாத்துன என்று கேட்க சித்தி ருக்மணி அவளுக்கு காது கேட்காது என்று சொல்ல இசைக்கு காது கேட்காது என்பது தெரிய வருகிறது.
அதைத் தொடர்ந்து பணக்கார குடும்பமான ஹீரோ பேமிலி கோவிலுக்கு வருகின்றனர். இந்த குடும்பத்தின் தலைவி என சுப்ரஜா தேவி 10 ஏழை எளிய ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்திருக்கிறார். இதற்காக குடும்பத்துடன் வந்து இறங்கியவர் கோவிலுக்கு ஏன் இருக்கும் பிச்சைக்காரர்கள் ஒவ்வொருத்தருக்கும் 500 ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொடுக்க ருக்மணி இதை பார்த்து ஆச்சரியம் கொள்கிறாள்.
அதன் பிறகு சுப்ரஜா தேவி தாலி எடுத்துக் கொடுக்க போகும் சமயத்தில் பானுமதி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் இதெல்லாம் சரியா நடக்காது என்று எதிர்மறையாக பேசி என்ட்ரி கொடுக்கின்றனர். இவர்கள் சுப்ரஜா குடும்பத்திற்கு எதிரானவர்கள் என்பது தெரிய வருகிறது. சுப்ரஜா வீட்டிலேயே இருக்கும் சிந்தாமணியின் அவளுக்கு எதிரானவர் ஆனால் சைலன்ட் வில்லி என்பதும் தெரிய வருகிறது.
சுப்ரஜா இவர்களுக்கு சரியான பதில் அளித்து விட்டு கல்யாணத்தை நல்லபடியாக நடத்தி வைத்து அட்சதை தூவும் போது அந்த அட்சதை இசையின் மீதும் படுகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த நாள் ருக்மணி இசைக்கு கல்யாணம் செய்து வைக்க மாப்பிள்ளை ஒருவரை வர வைக்கிறாள்.
அந்த மாப்பிள்ளைக்கு 40 வயசு எனக்கு தெரிந்து தாத்தா தேவராஜ் கோபம் கொள்கிறார். ருக்குமணி காது கேட்காத இவளுக்கு எப்படி நல்ல மாப்பிள்ளை கிடைக்கும் என்று ஏளனமாக பேச இசை தாத்தாவிடம் எனக்கு கல்யாணம் வேண்டாம் என நான் பார்த்துக்கிறேன் என்று எமோஷனலாகிறாள்.
அதன் பிறகு தனது அப்பா அம்மா போட்டோவை எடுத்து வைத்து இசை வருத்தப்பட ஒரு ஃப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகிறது. ஒரு பங்க்ஷன் முடித்து வட்டு வரும்போது இசையின் அப்பா அம்மா என இருவரும் மின்னல் தாக்கி உயிர் இழக்க அந்த அதிர்ச்சியில் இசைக்கும் காது கேட்காமல் போனது என்பது தெரிய வருகிறது.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் என்ற புத்தம் புதிய சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ