உங்கள் அக்கா, தங்கை வீடியோவை பாருங்கள்: ஸ்ருதி நாராயணன் காட்டம்!

Actress Shruthi Narayanan Leaked Video: ஸ்ருதி நாராயணனின் அந்தரந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அது நான் இல்லை என்று காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2025, 03:01 PM IST
  • சர்ச்சையில் சிக்கிய ஸ்ருதி நாராயணன்.
  • அந்தரந்த வீடியோ வெளியானதில் அதிர்ச்சி.
  • போலி வீடியோ என்று புகார்.
உங்கள் அக்கா, தங்கை வீடியோவை பாருங்கள்: ஸ்ருதி நாராயணன் காட்டம்!

Actress Shruthi Narayanan Leaked Video: பிரபல தொலைக்காட்சி நடிகையான ஸ்ருதி நாராயணனின் தனிப்பட்ட அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி கடந்த ஒரு வாரமாக பேசு பொருளாக மாறி உள்ளது. மேலும் இது அவரை சுற்றி பல சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளது. ஆடிசன் டேப் என்று கூறப்படும் இந்த 14 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ஸ்ருதி நாராயணனுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவில் இருப்பது அவர் தானா? அல்லது வேறு யாருமா என்ற கேள்விகளும் பலரால் எழுப்பப்பட்டது. இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வீடியோ குறித்து ஸ்ருதி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

shruthi

மேலும் படிக்க | வீர தீர சூரன் X விமர்சனம்: விக்ரமிற்கு பிளாக்பஸ்டர் வெற்றியா? மீண்டும் சொதப்பலா?

ஸ்ருதி நாராயணன் விளக்கம்

"இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவது உங்களுக்கு நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கும், என் நெருங்கியவர்களுக்கும், குடும்பத்திற்கும் இது மிகவும் கடினமான சூழ்நிலை. குறிப்பாக எனக்கு இது மிகவும் கடினமான நேரம், இதை எப்படி கையாள்வது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு பெண், எனக்கும் சில உள்ளுணர்வுகள் உள்ளன. என் நெருங்கியவர்களுக்கும் சில உள்ளுணர்வுகள் உள்ளன, நீங்கள் அதனை மோசமாக்குகிறீர்கள். ஒரு விஷயத்தை காட்டுத்தீ போல வேகமாக பரப்ப வேண்டாம் என்று உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அம்மா,  சகோதரி அல்லது காதலியின் இது போன்ற வீடியோக்களை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண் தான்.  அவர்களும் என்னை போல அதே உடல்களை தான் கொண்டுள்ளனர். எனவே என்னை விட்டுவிட்டு போய் அவர்களின் வீடியோவை பாருங்கள்" என்று இன்ஸ்டால் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

யார் இந்த ஸ்ருதி நாராயணன்?

24 வயதாகும் ஸ்ருதி நாராயணன் தமிழில் சீரியலில் நடித்து வருகிறார். தற்போது சிறகடிக்க ஆசை என்று சீரியலில் நடித்து பிரபலமாக உள்ளார். 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 650 எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ஸ்ருதி நாராயணன் கதாபாத்திரத்திற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு முன்பு கார்த்திகை தீபம்,  மாரி மற்றும் சில வெப் தொடர்களிலும் ஸ்ருதி நாராயணன் நடித்துள்ளார்.

மேலும் படிக்க | விக்ரமுக்கு கம்-பேக் படமாக அமைந்ததா வீர தீர சூரன்? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News