)
Shah Rukh Khan 60th Birthday: பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் பாட்ஷா என்று அழைக்கபடும் ஷாருக்கான் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது மொத்த சொத்து மதிப்பின் விவரம் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் ஷாரூக்கான். 1992ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான ஷாருக்கான் தற்போது உலகம் முழுவதும் இந்தியாவுக்கான முகமாக அறியப்படுகிறார். அவர் சினிமா நடிகர் என்பதை தாண்டி பெரிய ஆளுமையாகவும் விளங்குகிறார்.
1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர்களின் பெயர் ஆர்யன் கான் (மகன்) - Aryan Khan, சுகானா கான் (மகள்) - Suhana Khan, அப்ராம் கான் (மகன்) - AbRam Khan ஆகும். பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாரூக் கான் (Shah Rukh Khan ) தற்போது சொந்தமாக மும்பை மன்னத் வீட்டில் வசித்து வருகிறார்.
ஷாருக்கான் எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது கலைப் பயணத்தை ஆரம்பித்தார். 1980களின் பிற்பகுதியில் 'ஃபௌஜி' மற்றும் 'சர்க்கஸ்' போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் முதன்முதலில் புகழ்பெற்றார். 1992 ஆம் ஆண்டு வெளியான 'தீவானா' திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதைப் பெற்றார்.ஆரம்ப காலங்களில் 'டார்' மற்றும் 'பாஸிகர்' போன்ற படங்களில் எதிர்மறையான மற்றும் மனரீதியாக சிக்கலான வேடங்களில் நடித்துத் தனது நடிப்புத் திறனை நிரூபித்தார்.
1995 ஆம் ஆண்டு வெளியான 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' (DDLJ) திரைப்படம் ஷாருக்கானின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இது அவரை இந்திய சினிமாவின் மிகச்சிறந்த காதல் நாயகனாக நிலைநிறுத்தியது. 'குச் குச் ஹோதா ஹே', 'கபி குஷி கபி கம்', 'வீர்-ஸாரா', 'தில் தோ பாகல் ஹை' போன்ற பல காதல் மற்றும் குடும்பப் படங்களில் நடித்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் இதயங்களை வென்றார்.
2023 ஆம் ஆண்டில் அவர் நடித்த 'பதான்' மற்றும் 'ஜவான்' போன்ற ஆக்ஷன் திரைப்படங்கள் இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படங்களில் இடம்பிடித்ததன் மூலம், அவர் தனது பாக்ஸ் ஆபிஸ் ஆதிக்கத்தை மீண்டும் நிறுவினார்.
ஷாருக்கான் 'ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்படத் தயாரிப்பு மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) பங்கேற்கும் 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ்' கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளராக உள்ளார்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
இந்திய அரசு இவருக்கு 2005 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளான ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் மற்றும் லெஜியன் ஆஃப் ஹானர் விருதுகளைப் பெற்றவர்.
இதுவரை 15க்கும் மேற்பட்ட பிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார்.
தற்போது கடந்த மாதம் 71 வது தேசிய திரைப்பட விருது விழாவில் “ஜவான்” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது பெற்றார் நடிகர் ஷாரூக் கான்.
எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல், கடின உழைப்பு மற்றும் திறமையின் மூலம் உலகளாவிய சூப்பர்ஸ்டார் அந்தஸ்தைப் பெற்ற ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி ஷாருக் கான் இந்தியாவின் முன்னணி நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு தொழில் அதிபராகவும் உள்ளார். தற்போது உலகில் மிகுந்த சொத்து மதிப்பு கொண்ட நடிகராக அறியப்படுகிறார். 2025 ஆம் ஆண்டிற்கான Hurun India Rich List படி, அவருடைய சொத்துவிலை சுமார் ரூ.12,490 கோடி (அமெரிக்க டாலர் 1.4 பில்லியன்) ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. ஷாருக்கான் Red Chillies Entertainment என்ற தயாரிப்பு நிறுவனமும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்ற IPL அணியின் பங்குதாரராக உள்ளார். 30 வருடங்களுக்கு மேல் நடிகராக இருந்தாலும், தற்போது தயாரிப்பாளராகவும், வியாபாரியாகவும் தனது வருமானத்தை பெரிதும் வளர்த்துள்ளார். இவரது முக்கிய வருமான ஆதாரமாக திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் முதலீடுகள் உள்ளன.
ஷாருக் கான் தொடர்ந்து தனது திரைப்படங்கள் மற்றும் வியாபாரங்களில் வெற்றி பெற்று வருகிறார். குறிப்பாக ஜவான் திரைப்படம் 1000 கோடியை தாண்டிய வசூலுடன் பெரும் சாதனை படைத்தது. இது அவருடைய செல்வாக்கு மற்றும் மதிப்பை மேலும் உயர்த்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ