லட்சங்களில் மாத வீட்டு வாடகை.. கொடிகட்டிப் பறக்கும் ஷாருக் கான் வீட்டு பணியாளர்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ஷாரூக்கான் வீட்டில் வேலை செய்யும் நபர் தனது வீட்டிற்கு பல லட்சமாக வாடகையை கொடுப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 14, 2025, 04:38 PM IST
  • ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறார்.
  • 2001 ஆம் ஆண்டில் சொந்தமாக விலைக்கு வாங்கினார்.
  • வீட்டின் பெயர் ஜன்னத் (Jannat) ஆகும்.
லட்சங்களில் மாத வீட்டு வாடகை.. கொடிகட்டிப் பறக்கும் ஷாருக் கான் வீட்டு பணியாளர்

Shah Rukh Khan Staff House Rent Details: பாலிவுட் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் ஷாரூக்கான். 1992ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான ஷாருக்கான் தற்போது உலகம் முழுவதும் இந்தியாவுக்கான முகமாக அறியப்படுகிறார். அவர் சினிமா நடிகர் என்பதை தாண்டி பெரிய ஆளுமையாகவும் விளங்குகிறார்.

1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாரூக் கான் (Shah Rukh Khan ) தற்போது சொந்தமாக மும்பை மன்னத் வீடு இருக்கிறார். அந்த வீட்டில் தற்போது புதுப்பிப்பு பணிகள் நடைபெறுவதால் ஷாருக் கான் தற்போது பாந்த்ராவில் இருக்கும் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறார்.

இந்த வீட்டின் புதுப்பிப்பு பணிகள் நிறைவு பெற சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த வீடு சிறியதாக இருப்பதாகவே அடிக்கடி ஷாரூக் கான் கூறிவந்தாராம். இந்த நிலையில் அந்த வீட்டில் மேலும் இரு தளங்களை கட்ட மனைவி கவுரி திட்டமிட்டுள்ளார். இந்த வீட்டை ஷாருக்கான் கடந்த 2001 ஆம் ஆண்டில் சொந்தமாக விலைக்கு வாங்கினார். 

இந்த பங்களாவின் மொத்தம் 27 ஆயிரம் சதுர அடி கொண்டது. மேலும் இது ஒரு பழங்காலத்து வீடாகும். அப்போது இந்த வீட்டை 13 கோடிக்கு அவர் வாங்கியிருந்தாராம். மேலும் இந்த வீடு 24 ஆண்டுகள் கழித்து தற்போது ரூ 200 கோடி மதிப்பாகும். அதுமட்டுமின்றி இந்த பங்களாவின் பெயர் மன்னத் ஆகும். இதன் ஒரிஜினல் பெயர் வில்லா வியன்னா ஆகும். இந்த வீட்டை பாய் கோஷெத் பானு சஞ்சனா எனும் அறக்கட்டளையிடம் இருந்து கடந்த 2001 ஆம் ஆண்டு வாங்கிய ஷாருக்கான் 2005 ஆம் ஆண்டு மன்னத் என பெயரை மாற்றியுள்ளார். இதற்கு முன்பு ஷாருக் வைத்திருந்த வீட்டின் பெயர் ஜன்னத் (Jannat) ஆகும். 

தற்போது மன்னத் வீட்டில் இருந்த ஷாருக்கானின் இந்த வீடு 6 அடுக்குகளை கொண்டது. இந்த வீட்டில் நிறைய படுக்கை அறைகள், ஜிம், நீச்சல் குளம், நூலகம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. தற்போது வீட்டில் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் ஷாருக் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டிற்கு மாத வாடகை ரூ 24 லட்சம் ஆகும். ஷாருக்கான் வீட்டு பணியாளர்களுக்கு என மன்னத் வீட்டிலேயே தனி குடியிருப்புகள் இருந்ததாம். 

இந்த நிலையில் தற்போது ஷாருக்கே வாடகை வீட்டிற்கு வந்ததால் வீட்டு பணியாளர்களுக்கு ரூ 1.35 லட்சம் மாத வாடகையில் வீடு எடுத்து தங்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் ரசிகர்கள் ஷாருக்கானை ஆஹா ஓஹோ என பாராட்டி வருகிறார்கள். 

மேலும் படிக்க | மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்

மேலும் படிக்க | Fathima Babu: செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபுவா இது? அடையாளமே தெரியல..வைரலாகும் போட்டோஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News