நல்ல கதையம்சம் சார்ந்த படங்களைத் தயாரிப்பதன் மூலம் தங்களை திரைத்துறையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொண்ட பல தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் களமிறங்கியுள்ளது. நல்ல எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தயாரிப்பதை நோக்கமாக கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘மெஜந்தா’ திரைப்படம். துடிப்பான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக உருவாக இருக்கும் இதை ‘இக்லூ’ புகழ் பரத் மோகன் இயக்குகிறார்.
இதில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் பூஜை கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 6, 2025) காலை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் பெரும்பகுதி சென்னையிலும் சில பகுதிகள் கோத்தகிரியிலும் படமாக்கப்படும்.
#Magenta #மெஜந்தா An auspicious beginning with #BrandBlitzEntertainment Producer #LeelaRam sir
A new love story unfolds under dir #BharatMohan ‘s vision along with @Anjalinairoffl , #ActorBucks #ActorSharathRavi & a beautiful
teamTeaming up once again with my bro… pic.twitter.com/i7sxdyATPr— Shanthnu (@imKBRshanthnu) June 6, 2025
தயாரிப்பாளர்கள் டாக்டர் ஜே.பி. லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் கே. ராஜு கூறுகையில், “காதல், நகைச்சுவை மற்றும் விஷூவலாக நிச்சயம் ‘மெஜந்தா’ சிறப்பான படமாக இருக்கும். எங்கள் முதல் தயாரிப்பு முயற்சியாக ‘மெஜந்தா’ திரைப்படம் கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இயக்குநர் பரத் மோகன் கதை சொன்னபோது அதை விஷூவலாக பார்க்க முடிந்தது. அழகான சினிமாட்டிக் ஃபீல்- குட் எண்டர்டெயினர் கதையாக இந்தப் படம் பார்வையாளர்களுக்கு இருக்கும்” என்றார்.
படத்தின் கதைக்களம் பற்றி கேட்டபோது, “கதைக்களம் பற்றி இனி வரும் காலங்களில் சொல்கிறோம். ஒன்லைனில் சொல்ல வேண்டும் என்றால் ’அவள் சூரிய உதயம், அவன் அந்தி சாயும் நேரம். இருவரும் - ஒருபோதும் சந்திக்க விரும்ப மாட்டார்கள். ஆனால், பிரபஞ்சம் அந்த நிழலை ஒரே புள்ளியில் இணைக்கிறது’ என்ற தீம்தான் இந்தப் படம்” என்றார்.
தொழில்நுட்பக் குழு:
இசை: தரண் குமார்,
ஒளிப்பதிவு: பல்லு,
படத்தொகுப்பு: பவித்ரன்,
கலை: பிரேம்,
ஸ்டண்ட்ஸ்: சக்தி சரவணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-அப்துல் நாசர்
மேலும் படிக்க | எதிர்பார்ப்புகள் ஏமாற்றமா? தக் லைஃப் படம் எப்படி? X தள விமர்சனம்!
மேலும் படிக்க | இன்று வெளியான தக் லைஃப்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









