Sarath Babu Passed Away: நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்...
Actor Sarath Babu Passed Away: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நடிகர் சரத்பாபு, ஹைதராபாத்தில் இன்று (மே 22) காலமானார்.
Actor Sarath Babu Passed Away: பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவால் காலமான நடிகர் சரத்பாபுவின் உடல் ஹைதராபாத்தில் இருந்து சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
200க்கும் மேற்பட்ட படங்கள்
சரத்பாபு என்ற இவரின் பெயர் பலருக்கும் அறியாமல் இருந்தாலும், இவரின் வசிகரிக்கும் முகமானது அனைவருக்குமே பரிட்சையமனது என்றே கூறவேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவருக்கென முக்கிய இடம் உண்டு.
1973இல் அறிமுகம்
1973ஆம் ஆண்டு ராம ராஜ்யம் என்ற தெலுங்குத் திரைப்படம் தான் சரத்பாபுவின் முதல் படம். அதன்பிறகு 1978ஆம் ஆண்டு கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'நிழல் நீரை நிஜமாகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். மீண்டும் அதே ஆண்டில் தமிழில் மூன்று படங்கள் நடித்தார்.
மேலும் படிக்க | பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நடிகை க்ரித்தி ஷெட்டி?
செந்தாழம் பூவில்...
அந்த மூன்று படங்களில் 'முள்ளும் மலரும்' என்ற படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து தனது முழு நடிப்பு திறமையும் வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக, அந்த படத்தில் வரும் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்" என்ற பாடல் இன்னும் நினைவில் இருக்க ஒரு முக்கிய காரணம் நடிகர் சரத்பாபு தான். முள்ளும் மலரும் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சரத் பாபுவுக்கு, தமிழில் பல பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.
அண்ணாமலை அசோக்...
அண்ணாமலை திரைப்படத்தில் 'அசோக் என்ற கதாபாத்திரம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சரத்பாபு கொண்டு சென்றது எனலாம். 1995இல் முத்து படத்தில் ரஜினிகாந்துக்கே எஜமானாக நடித்த இவரின் நடிப்பை வெகுஜன மக்களால் இன்றும் பேசப்படுகிறது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற முக்கிய சூப்பர்ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ளார். ரஜினிகாந்தின் 90களின் பிளாக்பஸ்டர் படங்களில் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தார்.
ஜெயலலிதாவுடன்...
கடந்த 1980-ம் ஆண்டு பி.லெனின் இயக்கத்தில் உருவான ‘நதியை தேடி வந்த கடல்’ படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவுடன் இணைந்து சரத்பாபு நடித்திருந்தார். இந்தப் படம் ஜெயலலிதா நடித்த கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பல விருதுகள்
மேலும் இவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் அனைத்தும் பெரும்பாலும் துணை கதாப்பாத்திரங்களாக இருந்தாலும் அவை தனித்துவமான ஒன்று. 1973 முதல் இன்றுவரை சரத்பாபுவின் நடிப்புக்கு வரவேற்புள்ளது. இதுவரை சீக்கோக்கா சிலகா (1981), ஒ பரியா கத (1988), நீரஜனம் (1989) என்ற மூன்று திரைப்படங்களுக்கும் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். தமிழில் 2017ஆம் ஆண்டு மலையான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் தமிழ்நாடு மாநில விருதையும் பெற்றுள்ளார்.
இதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில், முக்கியமாக தூர்தர்ஷன் மற்றும் சில தனியார் தொலைக்காட்சி தொடர்களில் 1987ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை நடித்துவந்துள்ளார். சினிமாவை போன்று சிரியலிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் எனலாம். கடந்த 52 ஆண்டுகளாக இந்திய திரையுலகில் சிறந்த நடிகனாக விளங்கிய சரத்பாபு, தனது 72ஆம் வயதில் இன்று காலமானார். இவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | Thalapathy 68: விஜய் - வெங்கட்பிரபு இணையும் தளபதி 68 படத்தில் வில்லன் இவரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ