பிரபுதேவா - நயன்தாரா பிரிந்ததற்கு இந்த ஒரு விஷயம் தான் காரணமா?

நயன்தாரா மற்றும் பிரபுதேவா காதலில் இருந்தது தமிழ் சினிமா வட்டாரங்கள் முழுக்க அந்த சமயத்தில் முக்கிய செய்தியாக இருந்தது. பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.

Written by - RK Spark | Last Updated : Apr 7, 2025, 01:41 PM IST
  • காதலித்து வந்த நயன்தாரா - பிரபு தேவா.
  • பிறகு இருவரும் பிரிந்தனர்.
  • சில காரணங்களால் பிரிந்துள்ளனர்.
பிரபுதேவா - நயன்தாரா பிரிந்ததற்கு இந்த ஒரு விஷயம் தான் காரணமா?

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் நடன இயக்குனர் பிரபு தேவா இருவரும் சிறிது நாட்கள் உறவில் இருந்தனர். இவர்களது காதல் தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்தது. இருவரும் டேட்டிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் சிறிது நாட்களில் இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாரா மற்றும் பிரபுதேவா இருவரும் பிரிந்ததற்கு சில முக்கியமான காரணங்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் பிரபுதேவா நயன்தாராவிடம் இரண்டு கண்டிஷன்கள் போட்டுள்ளார். அது நயன்தாராவிற்கு பிடிக்காததால் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | 3 மாதம்..72 படங்களில் 5 மட்டுமே ஹிட்!! என்ன காரணம் தெரியுமா?

பிரபுதேவா போட்ட கண்டிஷன்

விஜய் மற்றும் நயன்தாரா நடித்த வில்லு படத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்ற போது கடைசி கட்டத்தில் இந்த காதல் தோல்வியில் முடிந்தது.  நயன்தாராவை திருமணம் செய்து கொள்வதற்காக பிரபு தேவா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இந்த உறவை மேலும் வலுவாக்க நயன்தாரா ஹிந்து மாதத்திற்கு மதம் மாறவும் தயாராக இருந்தார். ஆனால் இறுதியில் பிரபுதேவா போட்ட கண்டிஷன்லால் இந்த திருமணம் நின்றுவிட்டது.

பிரபுதேவாவிற்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த குழந்தை என்னுடன் தான் இருக்கும் என்றும், அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும் நயன்தாராவிடம் தெரிவித்துள்ளார். கூடுதலாக திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்க கூடாது என்றும் பிரபுதேவா தெரிவித்துள்ளார். இந்த கண்டிசன்கள் நயன்தாராவை கோபமடைய செய்துள்ளது, அதன் பின்பு புரிந்துள்ளார்.

பிரபுதேவா உடன் காதலுக்கு முன்பு நயன்தாரா சிம்புவை தீவிரமாக காதலித்து வந்தார். ஆனால் அந்த காதலும் பிரிவுடன் முடிந்தது. அதன் பின்னர் நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக இருவரும் இரவில் இருந்து வந்த நிலையில், திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | 2025ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 13 படங்கள்!! ‘இந்த’ 1 படத்திற்கு மவுசு அதிகம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News