ஜனநாயகன் படம் வெளியாகாததால் தமிழ் சினிமாவிற்கு 100 கோடி நஷ்டமா?

ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி வெளியாகாததால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 100 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

Written by - RK Spark | Last Updated : Feb 4, 2026, 04:24 PM IST
  • தியேட்டர்களுக்கு ரூ.100 கோடி நஷ்டம்!
  • ஜனநாயகன் ரிலீஸ் தாமதத்தால்...
  • தவிக்கும் திரையரங்க உரிமையாளர்கள்.
ஜனநாயகன் படம் வெளியாகாததால் தமிழ் சினிமாவிற்கு 100 கோடி நஷ்டமா?

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.   பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததன் காரணமாக நீதிமன்றம் வரை சென்ற இந்த பிரச்சனை தற்போது வரை முடியவில்லை. முதலில் தனி நீதிபதி படத்தை வெளியிடலாம் என்று உத்தரவு பிறப்பித்தார். உடனே CBFC தரப்பு மேல்முறையீடு செய்தனர். இதனால் படம் தற்போது வரை வெளியாகவில்லை. ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி வெளியாகாததால் தயாரிப்பு நிறுவனம் தாண்டி, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | ரிவைசிங் கமிட்டிக்கு செல்கிறதா ஜனநாயகன் படம்? வெளியான முக்கிய தகவல்

100 கோடி வரை இழப்பு?

ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி வெளியாகாததால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 100 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீண்ட விடுமுறையில் இந்த படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. இதற்காக மலேசியாவில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. படம் மட்டும் திட்டமிட்டபடி பொங்கலுக்கு படம் வெளியாகி இருந்தால், தமிழகத்தில் மட்டுமே 100 முதல் 200 கோடி வரை வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் படம் வெளியாகாததால் இந்த வருவாய் தற்போது நின்றுள்ளது. 

பொங்கலுக்கு வெளியான படங்கள் 

ஜனநாயகன் படம் வெளியாகாத நிலையில் பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 55 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மறுபுறம் ஜீவாவின் நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனுடன் வெளியான மற்றொரு படமான வா வாத்தியார் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மொத்தமாக பொங்கலுக்கு வெளியான படங்களின் வசூல் ஒட்டு மொத்தமாக 80 முதல் 90 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனநாயகன் படம் வெளியாகியிருந்தால் இந்த வசூல் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் திரையரங்குகளுக்கு பெரிதாக மக்கள் கூட்டங்கள் வராத நிலையில், ஜனநாயகன் படத்தை நம்பி இருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு படம் வெளியாகாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சிறிய படங்கள் வெளியாகி பெரிய வெற்றி பெற்றாலும், ஒரு பெரிய படம் அல்லது பெரிய நடிகரின் படம் வெளியானால் தான் திரையரங்குகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். படத்தின் டிக்கெட்டுகளை விட, திரையரங்குகளில் விற்கப்படும் உணவு மூலம் தான் திரையரங்கு உரிமையாளர்கள் லாபம் பெறுகின்றனர். ஒரு பெரிய படம் ஹிட்டானால் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு திரையரங்குகளை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சமாளிக்க முடியும் என்று உரிமையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

படம் எப்போது வெளியாகும்?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் இந்த பட விவகாரத்தை தனி நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்நிலையில் அடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை எப்போது நடக்கும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கு இடையில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இதன் காரணமாகவும் ஜனநாயகன் படம் வெளியாவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மாதம் உலக கோப்பை மற்றும் அடுத்த மாதம் ஐபிஎல் தொடர்கள் நடைபெற உள்ளதால், திரையரங்குகளின் வருமானம் பெரிதும் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்பது தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க | 5,000 சம்பளத்தில் தொடங்கி இன்று 6 கோடி சம்பளம் வாங்கும் தனுஷ் பட நடிகை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News