3BHK, ஃபீனிக்ஸ், பறந்து போ: 3ல் எது டாப்? எது Flop? ரசிகர்களுக்கு பிடித்த படம் எது?

3BHK Parandhu Po Phoenix Which Is Worth : ஜூலை 4ஆம் தேதியான இன்று ஒரே நாளில் 3 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றில், எந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன தெரியுமா? இதோ விவரம்!  

Written by - Yuvashree | Last Updated : Jul 4, 2025, 11:54 AM IST
  • ஒரே நாளில் வெளியான 3 படங்கள்
  • இதில் எந்த படம் மாஸ்?
  • எது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது?
3BHK, ஃபீனிக்ஸ், பறந்து போ: 3ல் எது டாப்? எது Flop? ரசிகர்களுக்கு பிடித்த படம் எது?

3BHK Parandhu Po Phoenix Which Is Worth : 

Add Zee News as a Preferred Source

ஜூலை மாதத்தின் தொடக்கத்திலேயே ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்ப, சில படங்கள் வெளியாகி இருக்கின்றன. அனைத்தும் குடும்ப கதைகளை கொண்ட படங்களாக இருக்கின்றன. இவற்றில் ரசிகர்களை கவர்ந்த படம் எது என்பதை இங்கு பார்ப்போம்.

3 BHK:

சித்தார்த், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 3 BHK. குடும்ப டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த் மகனாகவும், சரத்குமார் தந்தையாகவும் நடித்துள்ளார். தேவயானி தயாார் கதாப்பாத்தித்திலும், மீதா ரகுநாத் மகள் கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர்.

படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, 3 BHK-வின் ஸ்பெஷல் ஷோ சமீபத்தில் நடந்தது. இதனை பார்த்த பத்திரிகையாளர்கள் படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களை கொடுத்திருக்கின்றனர்.

படத்தை பார்த்த ஒருவர், சித்தார்த் சைத்ரா இடையே இருக்கும் காதல் குறித்தும் சரத்குமாரின் நடிப்பு குறித்தும் பாராட்டி இருக்கிறார். மேலும், படத்தின் பாடல்கள் நன்றாக இருப்பதாகவும், உணர்வுகளுடன் கனெக்ட் ஆக தவறுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மிடில் கிளாஸில் இருக்கும் அனைவருக்கும் இந்த படம் உணர்ச்சி பூர்வமாக கனெக்ட் ஆகும் என்று கூறியிருக்கிறார்.

பறந்து போ:

இயக்குநர் ராம், பேரன்பு படத்திற்கு பிறகு இயக்கியிருக்கும் படம் பறந்து போ. இதில், சிவா ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருடன் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, விஜய் ஏசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மகனின் ஆசைகளை நிறைவேற்ற விரும்பும் பெற்றோரின் வாழ்க்கையை சொல்லும் படமாக இருக்கிறது, பறந்து போ.

பறந்து போ படத்தின் ஸ்பெஷல் ஷோவும் சமீபத்தில் நடந்தது. இதில், படத்தை பார்த்த பலர் பெரிதும் இதனை பாராட்டி இருக்கின்றனர். இந்த படம் நல்ல நகைச்சுவை டிராமாவாக இருப்பதாகவும், பிற படங்களை காட்டிலும் இது வித்தியாசமாக இருப்பதாகவும் கூறியிருகின்றனர்.

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, கோலிவுட்டில் பல ஃபில் குட் படங்கள் வெளியாவதாக கூறியிருக்கிறார்.  பறந்து போ படத்தை, அனைத்து நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களும் பார்க்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர். நடிப்பும் இசையும் சூப்பராக இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

ஃபீனிஸ்க்:

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம், ஃபீனிஸ்க். இந்த படத்தை அனல் அரசு இயக்கியிருக்கிறார். இந்த படம், ஆக்‌ஷன் த்ரில்லராக இருப்பதாக கூறப்படுகிறது. சாம் சி.எஸ்சின் இசை நன்றாக இருப்பதாகவும், கேமரா வர்க் நன்றாக இருப்பதாகவும் சிலர் கூறியிருக்கின்றனர்.

முதல் பாதி மொத்தமாக வைலன்ஸ் ஆக இருப்பதாகவும், அதை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்றும் கூறியிருக்கின்றனர். 

மூன்றில் எந்த படம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது?

தியேட்டரில் வெளியாகியிருக்கும் 3 திரைப்படங்களுள் பறந்து பாே திரைப்படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. நல்ல ஃபீல் குட் டிராமாவாக இருக்கும் இந்த படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று படம் பார்த்த அனைவரும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | இந்த 5 படங்களை இனி எந்த ஓடிடி தளத்திலும் பார்க்க முடியாது!

மேலும் படிக்க | 3BHK to மாரீசன்-ஜூலை மாதம் ரிலீஸாகும் 5 புது தமிழ் படங்கள்! எந்த படத்தை, எந்த தேதியில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News