தமிழ் திரையுலகில் டாப் நடிகரகாக இருப்பவர், சிம்பு. பல ஆண்டு இடைவேளைக்கு பிறகு முதன்முறையாக நல்ல ஸ்கிரிப்டை தேர்ந்தெடுத்து, அரசன் படத்தில் நடிக்க முடிவு செய்தார்.
அரசன் திரைப்படம்:
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம், அரசன். வட சென்னை யுனிவர்ஸில் இன்னொரு படமாக, அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிம்புவுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு, கோவில்பட்டியில் நடந்து முடிந்தது. படத்தின் கதையும் அதற்கு ஏற்றவாறு, பாதி கதை கோவில்பட்டியில் நடப்பது போன்று, மீதி சென்னையில் நடப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது.
அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்:
நடிகர் சிம்பு நடித்து பாதியில் முடித்துக்கொடுக்காத படங்கள் பல உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவது, சில சமயங்களில் வராமலேயே போவது போன்ற விஷயங்களை செய்து கெண்டிருந்தார். இதனால், அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கத்தில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, வீட்டிலேயே இருந்ததால் அவரது உடல் எடை கூடியது. இதையடுத்து, கொரோனா சமயத்தில் உடல் எடையை குறைத்து, நல்ல கதைகளை கேட்பதில் கவனம் செலுத்தினார். இந்த காரணத்தினாலேயே, சிம்புவின் எந்த படத்திற்கு பிரச்சனை வந்தாலும், அதற்கு அவர்தான் காரணம் என்பது போல, ரசிகர்கள் பார்த்து வந்தனர். இந்த முறையும், அரசன் படப்பிடிப்பு நின்றதற்கு அவர்தான் காரணம் என்று நினைத்தனர். ஆனால், அங்குதான் ட்விஸ்ட் வந்தது.
ஐசரி கணேஷ் வைத்த ட்விஸ்ட்!
சிம்புவுடன், ஒரு காலத்தில் அண்ணன் போல பழகியவர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். சிம்புவின் 49வது திரைப்படத்தை வேல்ஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருந்தது. அதற்காக, அட்வான்ஸ் வாங்கி விட்டு சிம்பு அதில் நடித்துக்கொடுக்கவே இல்லை என்பது ஐசரி கணேஷின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் FEFSI தொழிலாளர்கல் சம்மேளனம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டுள்ளதால், அரசன் படப்பிடிப்பு தளத்தின் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிக்கும் இன்னொரு படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டு, அதற்காக 5 கோடி வாங்கிவிட்டு, படமும் தொடங்கப்படாததாலும், சிம்புவின் ஒத்துழைப்பு இதற்கு கிடைக்காததாலும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
பொங்கிய டீ.ராஜேந்தர்:
நடிகரும், இயக்குநரும், சிம்புவின் தந்தையுமான டீ.ராஜேந்தர், அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்திய விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அப்போது பேசுகையில், “அரசன் ஷூட்டிங்கை நிறுத்துமாறு உத்தரவிட்டது யார்? நான் இங்கு ஒரு தந்தையாகவோ, சிம்புவுக்காகவோ வரவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், FEFSI-யும் இணைந்து நடத்தும் இந்த அநீதியை சுட்டிக்காட்டவே வந்திருக்கிறேன்” என கூறினார்.
மேலும், ஐசரி கணேஷ் தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்றம் சிம்புவிற்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளதாக டி.ராஜேந்தர் சுட்டிக்காட்டி இருக்கிறார். VTK படத்திற்கு பிறகு, வழங்கப்பட்ட முன்பணம் சட்டப்பூர்வமாக சிம்புவையே சாரும் என நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் தன் வசம் இருப்பதாகவும் கூறினார். அதே சமயத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி சங்கங்கள் செயல்படுவது என்பது சட்டவிரோதமானது என்றும் கூறினார்.
இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டி.ராஜேந்தர், இந்த விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிட்டு சிம்புவுக்கு நீதி பெற்று த் அர வேண்டும் என்று கூறினார். இது குறித்து, விரைவில் செய்தியாளர்களை சந்தித்து இவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷுக்கு ஒரு நியாயம், சிம்புவுக்கு ஒரு நியாயமா?
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கொடுத்த புகாரின் பேரில்தான், இந்த பிரச்சனையானதுனடந்திருக்கிறது. இப்போது, அவரிடமிருந்து பெற்ற முன்பணத்தை திருப்பி கொடுக்காமல் சிம்பு இந்த படத்தில் நடிப்பதால் அவர் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
சிம்பு கொடுக்க வேண்டிய முன்பண தொகைக்காக, தற்போது அரசன் படப்பிடிப்பு நிறுத்தப்படுகிறது என்றால், அதே போல், தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமிக்கு தனுஷ் கொடுக்க வேண்டிய தொகையும் நிலுவையில் உள்ளது. ஆனால், அவரது படங்களான இட்லி கடை, கர உள்ளிட்டவை வரிசையாக வெளியாகிதான் வருகின்றனர்.
இதே போல, தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நடிகர் சங்கத்தின் செயலாளருமான விஷாலும், லைகா நிறுவனத்திற்கு தர வேண்டிய தொகை நீதிமன்ற வழக்கில் இருக்கிறது. ஆனால், அவரது படங்கள் தங்கு தடையின்றி வெளி வருகின்றனர்.
இப்படி விஷயம் தெரிந்தவர்கள், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து “அவங்களுக்கு ஒரு நியாயம், சிம்புவுக்கு ஒரு நியாயமா?” என்று கேட்டு வருகின்றனர்.
எது எப்படியிருந்தாலும், சிம்பு தனது கம் பேக் படம் என கருதிய தக் லைஃப் மொத்தமாக ஊற்றிக்கொண்டது. அதை நம்பியிருந்த அவர், கடைசி நேரத்தில் ஓகே செய்ததுதான் அரசன் திரைப்படம். இப்போது அந்த படத்தின் ஷூட்டிங்கும் நடக்காமல் இருப்பது, அவருக்கு மேலும் மன உளைச்சளை தூண்டியிருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
கேள்வி : அரசன் திரைப்படம் வட சென்னை யுனிவர்ஸில் இருக்கிறதா?
பதில் : அரசன் சிம்பு நடித்துவரும் திரைப்படம். இதை வெற்றிமாறன் இயக்குகிறார். இது வட சென்னை யுனிவர்ஸ் பின்னணியில் உருவாகும் படம்.
கேள்வி : இந்த படத்தில் வேறு யார் நடிக்கிறார்கள்?
பதில் : இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கேள்வி : அரசன் படப்பிடிப்பு ஏன் நிறுத்தப்பட்டது?
பதில் : தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் சிம்பு இடையேயான முன்பணம் (advance) விவகாரம் காரணமாக, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் FEFSI தலையிட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
மேலும் படிக்க | அல்லு அர்ஜுன் - அட்லீயின் திரைப்பட டைட்டில் ’ராக்கா’! இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









