STR 49 படத்தின் பெயர் ‘அரசன்’..போஸ்டர் வெளியீடு! ஹீரோயினாக 3 பேர்..

STR 49 Arasan Who Is Heroine : சிம்பு நடித்துள்ள அவரது 49வது படத்திற்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில், ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

Written by - Yuvashree | Last Updated : Oct 7, 2025, 12:22 PM IST
  • சிம்புவின் 49வது படம்
  • டைட்டில் அரசன்..
  • ஹீரோயின் யார்?
STR 49 படத்தின் பெயர் ‘அரசன்’..போஸ்டர் வெளியீடு! ஹீரோயினாக 3 பேர்..

STR 49 Arasan Who Is Heroine : சிம்புவின் 49வது படத்தை வெற்றிமாறன் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த படத்திற்கு ‘அரசன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

அரசன் திரைப்படம்:

‘வட சென்னை’ யுனிவர்ஸில் முக்கிய கதையாக இடம் பெற்றிருக்கிறது சிம்புவின் 49வது திரைப்படம். இந்த படத்திற்கு என்ன டைட்டில் வைக்கப்பட இருக்கிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. இதையடுத்து, படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இது குறித்த பதிவை வெளியிட்டிருக்கிறார்.

“ஆளப்பிறந்த அரசன் வெற்றியுடன் சிலம்பரசன்" என்று குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

படத்தின் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

3 நடிகைகள்!

சிம்புவின் அரசன் திரைப்படத்தில் யார் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ், ஸ்ரீலீலா மற்றும் சமந்தா உள்ளிட்ட நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் 3 பேரில் யாரேனும் ஒருவர் கதாநாயகியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அனிருத் இசை!

சிம்பு-வெற்றிமாறனின் அரசன் திரைப்படத்திற்கு, அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இது, முதன் முதலில் இணையும் கூட்டணி ஆகும். இந்த படத்தில் அவர் சிம்புவிற்கு போடும் இசையை கேட்க ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

வட சென்னை கதையும் வருமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி, பெரு வெற்றி பெற்ற படம், வட சென்னை. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இது இருக்குமா என்கிற கேள்வி நிலவி வந்தது. ஆனால், இது அந்த யுனிவர்சின் இன்னொரு கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த படத்தை போன்ற இன்னொரு வடிவத்தை இந்த கதை கொண்டுள்ளதாக இதுவரை வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | வட சென்னை படத்தில் தனுஷுக்கு பதில் ஹீரோவாக நடிக்க வேண்டியவர்! யார் தெரியுமா?

மேலும் படிக்க | வட சென்னை 2 வருமா வராதா? வெற்றிமாறன் சொன்ன பதில் என்னன்னு நீங்களே பாருங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News