)
தக் லைப் படத்திற்கு பிறகு சிம்புவின் 49 வது படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வந்தது. முதலில் இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் தான் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. கதாநாயகியாக கையோடு லோஹர் நடிக்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இந்த படம் தள்ளிப் போய் உள்ளது. உடனடியாக சிம்புவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்ற தகவல்கள் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு ப்ரோமோ வீடியோவும் உருவானது. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான எந்த ஒரு விவரமும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகும் என்றும் அதில் அனைத்து தகவல்களும் இடம்பெறும் என்றும் கூறப்பட்டது. வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் சிம்பு நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தனுஷ் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும், NOC கொடுப்பதற்கு அதிக பணம் கேட்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி கோலிவுட்டில் வைரலாக பரவியது. இதனால் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
வெற்றிமாறன் விளக்கம்
சிம்பு படத்தை வெற்றிமாறன் இயக்குவது தனுஷுக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் தான் பணம் கேட்கிறார் என்றும் வதந்திகள் பரவியின் நிலையில் இதற்கு வெற்றிமாறன் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். "சிம்புவின் அடுத்த படத்தை நான் தான் இயக்குகிறேன். இது வட சென்னை படம் நடைபெறும் காலகட்டத்தில் தான் நடைபெறுகிறது. அந்த படத்தில் நடித்த சில நடிகர்கள் இந்த படத்திலும் நடிப்பார்கள். இது சம்பந்தமாக தனுஷிடம் பேசியபோது அவர் உடனடியாக என்ஓசி தருவதற்கு அனுமதி தெரிவித்தார். மேலும் வேறு என்ன மாதிரியான உதவிகள் வேண்டுமானாலும் செய்து தரவும் அவர் தயாராக இருக்கிறார். வடசென்னை படத்திற்கு தனுஷ் பணம் கேட்பதாக வெளியாகும் எந்த ஒரு தகவலும் உண்மை இல்லை. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது" என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
Vetrimaran about Dhanush NOC Issue :
— RamSay (@TroyboiS) June 30, 2025
"I didn’t like people talking such things about us"@dhanushkraja pic.twitter.com/vgFIkGcMS3
வெற்றிமாறன் சொன்ன தகவலின் படி வடசென்னை இரண்டாம் பாகத்தில் தனுஷ் தான் நடிப்பார் என்பதும், வேறு ஒரு கிளைக்கதையில் தான் சிம்பு நடிக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. வரும் காலத்தில் சிம்பு மற்றும் தனுஷ் ஒரே படத்தில் இணைந்து நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சிம்பு - வெற்றிமாறன் இணையும் படத்திலேயே தனுஷ் கேமியோ ரோலில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ