)
Similarities Between Nayakan And Thug Life : சினிமா ரசிகர்கர்கள் மத்தியில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்குகிறார் மணிரத்னம். இவர், கமலுடன் 38 வருடங்கள் கழித்து மீண்டும் தக் லைஃப் திரைப்படத்துடன் கைக்கோர்த்திருக்கிறார். இப்படம், ஜூன் 5ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கும் நாயகன் படத்திற்கும் இருக்கும் ஒற்றுமை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
மணிரத்னம்-கமல் கூட்டணி:
சினிமா ரசிகர்களால், கொண்டாடப்படும் இயக்குநர்களுள் முக்கிய இடத்தை பெற்ற ஒருவராக இருக்கிறார், மணிரத்னம். இவர் படம் என்றாலே, பலருக்கும் அதன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். அதே கதைதான் கமலின் படங்களுக்கும். இவர்கள் இருவரும் முதன்முதலில் இணைந்த படம், ‘நாயகன்’. 1987ஆம் ஆண்டு வெளியான இந்த படம், ஒரு கல்ட்-கிளாசிக் கேங்கஸ்டர் டிராமாவாக இருந்தது. இந்த படம், வெளியானபோது மிகப்பெறிய வெற்றியையும் பெற்றது.
நாயகன் படத்திற்கு பிறகு, என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, கமலும் மணிரத்னமும் மீண்டும் இணையவே இல்லை. இப்போது 38 ஆண்டுகளுக்கு பிறகுதான், தக் லைஃப் திரைப்படம் மூலம் இருவரும் இணைந்திருக்கின்றனர். இந்த நிலையில், நாயகன் படத்தின் காபிதான் தக் லைஃப் படம் என்று சிலர் சந்தேகித்திருக்கின்றனர். அதிலிருந்து இரு திரைப்படத்திற்கும் இருக்கும் ஒற்றுமையையும் வித்தியாசத்தை ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.
1.கேங்ஸ்டர் கதை:
நாயகன் படத்திற்கும் தக் லைஃப் படத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகளுள் ஒன்று, இரண்டுமே கேங்ஸ்டர் கதை என்பதுதான். நாயகன் படத்தில் கமல், ஒரு கூட்டத்தில் தலைவனாக ‘வேலு நாயக்கர்’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பர். இப்போது இத்தனை வருடங்கள் கழித்து தக் லைஃப் படத்திலும் ‘ரங்கராய சக்திவேல் நாயக்கர்’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
வேலுவின் கதாப்பாத்திரம், வலியில் இருந்து பிரந்த கதாப்பாத்திரமாக இருக்கும். சக்திவேலின் கதாப்பாத்திரம் அதிகார மரபில் பிறந்து, அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் கதாப்பாத்திரம் ஆகும். இரு கதாப்பாத்திரங்களை சுற்றியுமே வன்முறைகள் அதிகமாக இருக்கும்.
2.டான்:
வேலு, சக்திவேல் இரு கதாப்பாத்திரங்களுமே ஒரு கூட்டத்திற்கு தலைவனாக விளங்கும் டான் கதாப்பாத்திரமாக இருக்கின்றன. வேலு, தான் இப்படி டான் ஆனதை நினைத்து வருத்தப்படும் கதாப்பாத்திரம். சக்திவேல், தனது வரலாற்றை, தீவிர நோக்கத்துடன் மீண்டும் எழுத தொடங்குகிறார்.
வேலுவின் கதாப்பாத்திரம், தன் வாழ்வில் தனக்காக பிறர் செய்த தியாகங்களை பார்க்க, சக்தியின் கதாப்பாத்திரம் முடிக்கப்படாத வேலையை முடிக்க நினைக்கிறது.
3.குடும்பம் & துரோகம்:
நாயகன் படத்தில் ஹீரோவின் குடும்பம்தான் அவரது பலவீனமாக இருக்கும். அதே போன்ற கதாப்பாத்திரம்தான் தக் லைஃப் படத்தின் சக்திவேல் உடையதும். தனது மகனாக அவர் தேர்ந்தெடுத்து, குடும்பமாக நினைக்கும் ஒருவன் (சிம்பு), அவனுக்கு எமனாக மாறுகிறான்.
4.மரணம்தான் ஒரே விதி:
நாயகன் படத்தில், நாயக்கரின் முடிவு, மரணமாக இருக்கும். அதிகாரத்தின் உச்சபட்சம், இந்த தனிமையான சாவுதான் என்பதை காண்பிப்பது போல இதில் திரைக்கதை இருக்கும். தக் லைஃப் படத்தில் சக்திவேலின் மறு பிறப்பே, சாவில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அவர், தனது அழிவில் இருந்து எழுந்து, தனக்கு சொந்தமானதை திரும்ப பெற போராடுகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ