)
Chinmayi Songs After Muththa Mazhai : தக் லைஃப் திரைப்படம் யாருக்கு பெரிய வெற்றியாக அமைந்ததோ இல்லையோ, சின்மயிக்கு பெரும் லாபத்தை தேடி கொடுத்தது. பல இன்னல்களுக்கு பிறகு தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
முத்தமழை பாடல்:
தக் லைஃப் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஹிட் பாடல், முத்தமழை. இந்த பாடலை ஒரிஜினலாக பாடியது, பாடகி தீதான். ஆனால், இதனை தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தீ இல்லாததால் சின்மயி இந்த பாடலை பாடினார். இது, தீ-யின் ஒரிஜினல் வர்ஷனை விட பெரிய ஹிட் அடித்தது. முத்தமழை பாடலை சிவ ஆனந்த் எழுத, ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கு இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களை ஏமாற்றி இருந்தாலும், பாடல்கள் அனைத்தும் பல காலங்களுக்கு நின்று நிலைத்து பேசும் வகையில் இருந்தன.
திரையுலகில் தடை:
சின்மயி, #MeToo பிரச்சனையில், வைரமுத்துவின் மீது குற்றம் சாட்டிய போது, பெரும்பாலானோர் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை. வைரமுத்துவோடு சேர்த்து அவர் திரையுலகில் பலர் இப்படி இருப்பதாக கூறினார். இதையடுத்து, இவருக்கு எட்டுத்திக்கில் இருந்தும் கன்டனங்கள் எழுந்தது.
தமிழ் டப்பிங் சங்கத்தின் தலைவராக இருக்கும் ராதாரவி, இதை காரணமாக வைத்து தன்னை டப்பிங் பேசவிடாமல், பாட விடாமல் செய்ததாக சின்மயி குற்றம் சாட்டினார். இதை மீறி அவர் சில படங்களுக்கு டப்பிங் பேசிய போது, அவர்களுக்கும் ராதாரவி அவர்களுக்கும் தொல்லை கொடுத்தாக கூறினார்.
இந்த பிரச்சனையால் சின்மயிக்கு தமிழ் படங்களில் பாடுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. ஆனால், முத்தமழை பாடல் அந்த தடை அனைத்தையும் உடைத்து எறிந்து விட்டது. இப்போது சின்மயி தமிழிலும் பாட ஆரம்பித்து இருக்கிறார்.
கமிட் ஆன படங்கள்:
முத்தமழை பாடல் ஹிட் ஆனதற்கு பிறகு, சின்மயிக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவர் இசையமைப்பாளர் டி.இமான்தான். கே.எஸ்.அதியமா இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தின் பாடலை சின்மயி பாடியிருக்கிறார். இந்த பாடலை சினேகன் எழுதியிருக்கிறார்.
சின்மயி, இப்போது மலையாளத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். மலையாளத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் ‘சின்ன சின்ன ஆசை’ பாடலை அவர் சமீபத்தில் பாடி முடித்திருக்கிறார்.
தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்..
தக் லைஃப் படத்தின் முத்தமழை பாடலை சின்மயி மேடையில் பாடி, 1 மாதம் கடந்து விட்டது. ஆனால், அவர் பாடிய அந்த வீடியோ இன்னும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. நான்கு வாரங்களுக்கு முன்பு வெளியான இந்த பாடல், தற்போது 47 மில்லியன் வியூஸ்களை யூடியூப் தளத்தில் கடந்திருக்கிறது. தக் லைஃப் படத்தின் டிரைலரே 35 மில்லியனில்தான் இருக்கிறது. தீ வர்ஷன் படத்தில் இருந்தாலும் சின்மயியின் வர்ஷனும் ஆல்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
சின்மயி, தற்போது தொடர்ந்து பல்வேறு நேர்காணல்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அதில், தனக்கு அனைவரும் ஆதரவு கொடுத்ததற்கு நன்றி கூறுவதோடு, கடந்த 4 ஆண்டுகள் தனக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் கூறி வருகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ