Singer Janaki Son Murali Krishna Passes Away : தமிழ் திரையுலகில், முக்கிய பாடகியாக இருப்பவர் ஜானகி. இவரது மகன், தற்போது உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் தகவலை திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாடகி ஜானகியின் மகன்:
தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் பாடல் பாடியிருப்பவர் பாடகி, எஸ்.ஜானகி. இவர் குரலில் இதுவரை சுமார் 40,000 அதிகமாக பாடல்கள் வெளிவந்துள்ளன. ஆந்திராவில் உள்ள குண்டூர் அருகே இருக்கும் பகுதியில் பிறந்த ஜானகி, சினிமா படங்களில் பாட வாய்ப்பு வந்த பிறகு சென்னைக்கு குடி பெயர்ந்தார். பின்னர், ராம் பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜானகி-ராம் பிரசாத் தம்பதிக்கு முரளி கிருஷ்ணா என்கிற மகன் இருந்தார்.முரளி கிருஷ்ணவை பற்றி, பெரிதாக பலருக்கு தெரியாது. ஆனால், அவர் சில படங்களில் மட்டும் நடித்திருக்கிறார். இவர், ஐதராபாத்தில் வசித்து வந்தார். இவருக்க்கும், சென்னையை சேர்ந்த நடன கலைஞரான உமா என்பவருக்கும் திருமணம் நடந்தது. முரளி-உமா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இருப்பினும், முரளியும் உமாவும் பிரிந்து வாழ்ந்து, விவாகரத்தும் பெற்று விட்டனர். தற்போது ஜானகியின் பேத்திகளான இரு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது.
உயிரிழப்பு:
முரளி, தன் தாயாருடன் சென்னையில் இருக்கும் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று அதிகாலை அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையுலகினர் அனைவரும் ஜானகிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
பாடகி சித்ரா, “இந்தத் தாங்க முடியாத வலியையும் துயரத்தையும் தாங்கிக்கொள்ள அந்தத் தாய்க்கு இறைவன் சக்தியை வழங்குவாராக…” என்று இறங்கல் தெரிவித்திருக்கிறார். இவர் ஜானகியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் பாடகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. முரளியை தனது சகோதரர் என்று குறிப்பிட்டிருக்கும் சித்ரா, அவரது குடும்பத்தினருக்காக வேண்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









