Suchitra About Jayam Ravi Keneshaa Aarti : கடந்த சில நாட்களாகவே, இணையத்தில் தமிழ் மக்களால் அதிகம் தேடப்பட்ட பெயர்களாக இருப்பது, ரவி மோகன்/ஜெயம் ரவி, ஆர்த்தி ரவி மற்றும் கெனிஷா என்பதுதான். சமீபத்தில ஆளாளுக்கு இவர்கள் மாற்றி மாற்றி வெளியிட்டு வரும் அறிக்கைகள் மக்களை அதிர வைத்துள்ளது. இந்த நிலையில், முதன்முறையாக, ஆர்த்திக்கு எதிராகவும் ரவி மோகன் மற்றும் கெனிஷாவிற்கு ஆதரவாகவும் பாடகி சுசித்ரா சில வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.
என்ன பிரச்சனை?
நடிகர் ரவி மோகனும், பிரபல தயாரிப்பாளரின் மகள் ஆர்த்தியும் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் அவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு, தான் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு, அவரும் அவரது தோழி கெனிஷாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலானது. இது காதலா என்கிற கேள்வி எழுந்த போது இருவரும் அதனை முழுமையாக மறுத்தனர். கூடவே தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும்தான் என்று கூறினர். ஆர்த்தி, தன்னிடம் கேட்கப்படாமல் இந்த விவாகரத்து குறித்த அறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.
சமீபத்தில், ரவி மோகன் கெனிஷாவுடன் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். அதற்கு ஓரிரு தினங்கள் கழித்து அவரது மனைவி ஆர்த்தி தன் மகன்களும் தானும் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு ரவி நாேட்டீஸ் அனுப்பியிருப்பதாக அறிக்கையை வெளியிட்டார். கூடவே, தான் இன்னும் ரவி மோகனின் மனைவிதான் என்றும், தன்னால் முன்னாள் மனைவி என்று குறிப்பிட வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ரவி மோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், தான் இத்தனை ஆண்டுகளாக உடல், மனம் மற்றும் நிதி ரீதியாக கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், தன் குழந்தைகளை பார்க்க விடாமல் அவர்களுடன் எப்போதும் பவுன்சர்ஸ் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். கெனிஷா, ஆரம்பத்தில் தனக்கு ஒரு நல்ல தோழியாக இருந்ததாகவும், அவர் தனது வாழ்வின் ஒளி என்றும் ரவி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
மக்களின் ரியாக்ஷன்..
ரவி மோகன் விஷயத்தில், ஆர்த்தி அறிக்கையை வெளியிட்ட பின்பு மக்கள் அனைவரும் கெனிஷாவிற்கும் ரவி மோகனுக்கும் எதிராக திரும்பினர். “2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்தவரின் குடும்பத்தை இப்படி கெடுத்து விட்டாரே” என்று கெனிஷாவை பலர் பழித்து வந்தனர். அதே போல, ரவி மோகனின் படங்களை இனி பார்க்க கூடாது எனவும், கெனிஷாவின் வேலைகளையும் புறக்கணிக்க வேண்டும் எனவும் சிலர் யூடியூபில் பேசி வந்தனர். ஆர்த்திக்கு சாதகமாக பேசி வந்த சிலரும், ரவி மோகனின் இந்த அறிக்கைக்கு பிறகு அவர் பக்கம் சாய ஆரம்பித்தனர். ஆர்த்தி, தனது குழந்தைகளை வைத்து, தாய்மையை வைத்து வேடமிட்டு மக்களின் ஆதரவை சம்பாதிப்பதாக சிலர் கூறினர்.
என்ன பேசினார் சுசி?
பிரபல பாடகி சுசி, சமீபத்தில் 4 வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். அவை நான்கிலுமே, ரவி மோகன்-கெனிஷா-ஆர்த்தி பிரச்சனை குறித்து பேசியிருக்கிறார்.
முதல் வீடியோவில், ஜெயம் ரவியும் கெனிஷாவும் அப்படி என்ன தவறு செய்தார்கள்? அவர்களை ஏன் கேன்சல் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்.
இரண்டாவது வீடியோவில், கெனிஷாவின் உடையை பற்றி பிறர் பேசுவதற்கு பதில் கொடுத்திருக்கிறார். மேலும், அவர் கடினமாக உழைத்து முன்னால் வந்திருக்கும் பெண் என்றும், அவரை எந்த உடை உடுத்த வேண்டுமென யாரும் சொல்லக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
3வது வீடியோவில், ரவி மோகனின் குழந்தைகள் குறித்து பலர் பேசி வருவது குறித்து பேசியிருக்கும் சுசி, அவர்களை பார்த்துக்கொள்ள அம்மா, அப்பா, சித்தி, த்ரிஷா, குஷ்பூ என பலர் இருப்பதாக கூறியிருக்கிறார். அந்த குழந்தைகள் அவர்களின் வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதை வைத்து முட்டாள் தனமாக பேசி வருவதாக கூறியிருக்கிறார்.
4வது வீடியோவில், இன்னும் விவாகரத்து வாங்காத சமயத்தில், இன்னொரு பெண்ணுடன் எப்படி ரவி மோகன் தொடர்பில் இருக்கலாம் என்கிற கருத்துக்கு பதில் தெரிவித்திருக்கிறார். அதில், நீங்கள் யாரும் நீதிபதியாக மாற வேண்டாம் என்றும், ரவி மோகனின் நீதித்துறை குழு கூறிய பிறகு கூட அவர் அதனை செய்திருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். இவர்கள் விஷயத்தில், நீங்கள் யாரும் கோட் போட்டுக்காெண்டு நீதிபதியாக மாற வேண்டாம், அதனை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் என சுசி கூறியிருக்கிறார்.
இந்த வீடியோக்களில் கமெண்ட் செய்திருக்கும் பலர், ரவி மோகனுக்கும் கெனிஷாவிற்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கெனிஷாவும் இந்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரீ-ஷேர் செய்திருக்கிறார்.
மேலும் படிக்க | ரவி மோகன் மனைவி ஆர்த்தி குறித்து கெனிஷா போட்ட பதிவு! என்ன நடக்கிறது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ