Sivakarthikeyan Madharasi Release Date Update: தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர், சிவகார்த்திகேயன். கடந்த 10 வருடங்களில் அசுர வளர்ச்சி கண்ட ஹீரோக்களும் ஒருவரான இவர், இப்போது 100 கோடி வசூல் கொடுத்த நாயகனாகவும் மாறிவிட்டார்.
சிவகார்த்திகேயனின் மதராஸி:
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பிறகு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராசி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 23வது படமான இது, ஆக்சன் திரில்லர் பானையில் உருவாகி வருகிறது. தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இது உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். அதன்படி இந்த படத்திற்கு தமிழில் மதராசி என்றும் இந்தியில் தில் மதராசி என்றும் பெயர் வைக்கப்பட்டது.
#SKxARM is #Madharasi in Tamil, Telugu, Kannada & Malayalam & #DilMadharasi in Hindi
Get ready for Massive Carnage in cinemasSK & ARM are all set to give you THE BIGGEST ACTION FILM
TITLE GLIMPSE & FIRST LOOK out now!
https://t.co/ORNLrxLhZGHappy Birthday,… pic.twitter.com/a7jA0TEmNM
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) February 17, 2025
யாரெல்லாம் நடிக்கிறாங்க?
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து, வித்யூத் ஜாம்வால் நடிக்கிறார். துப்பாக்கி படத்தின் வில்லனான இவர், இந்த படத்திலும் நெகடிவ் ராேல் அல்லது முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பார் எனக்கூறப்படுகிறது. அதே போல, நடிகர் விக்ராந்தும் இதில் நடிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் என்ற புதுமுகம் நடிக்கிறார்.
அனிருத் இசை:
அனிருத், சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு பெரிய திருப்பத்தை கொடுத்த படம், எதிர்நீச்சல். இந்த படம் முதல், சிவகார்த்திகேயனுக்கு கம்-பேக் படமாக அமைந்த ‘டாக்டர்’ படம் வரை பல படங்களுக்கு அனிருத் இசையமைத்து கொடுத்திருக்கிறார். இந்த கூட்டணியில்தான் தற்போது மதராசி படமும் உருவாகியிருக்கிறது. இதனால் இந்த படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதராஸி ரிலீஸ் தேதி:
இந்நிலையில் தற்போது மதராஸி படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மதராஸி படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள்..
இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் கமிட்டாகி பணியாற்றி வரும் படம், பராசக்தி. இந்த படத்தை, சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். முக்கிய கதை பாத்திரங்களாக அதர்வா, ஸ்ரீலீலா நடிக்க, நெகட்டிவ் கேரக்டரில் ஜெயம் ரவி வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









