சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை கைபற்றிய Netflix.. எத்தனை கோடி தெரியுமா?

Sivakarthikeyan Madharasi Grab Netflix: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மதராஸி படத்தின் OTT விநியோகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 21, 2025, 07:57 PM IST
  • சிவகார்த்திகேயனின் மதராஸி
  • மதராஸி OTT விநியோகம்
சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை கைபற்றிய Netflix.. எத்தனை கோடி தெரியுமா?

Sivakarthikeyan Madharasi Grab Netflix: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மதராஸி படத்தின் OTT விநியோகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Add Zee News as a Preferred Source

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர், சிவகார்த்திகேயன். கடந்த 10 வருடங்களில் அசுர வளர்ச்சி கண்ட ஹீரோக்களும் ஒருவரான இவர், இப்போது 100 கோடி வசூல் கொடுத்த நாயகனாகவும் மாறிவிட்டார்.

சிவகார்த்திகேயனின் மதராஸி:
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பிறகு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் (A R Murugadoss) இயக்கும் மதராசி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 23வது படம் தான் மதராஸி. இது, ஆக்சன் திரில்லர் பானையில் உருவாகி வருகிறது. தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இது உள்ளது. இந்த படத்திற்கு  தமிழில் மதராசி என்றும் இந்தியில் தில் மதராசி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் நடிக்கின்றனர்?
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் (Sivakarthikeyan) சேர்ந்து, வித்யூத் ஜாம்வால் நடிக்கிறார். துப்பாக்கி படத்தின் வில்லனான இவர், மதராசி படத்திலும் நெகடிவ் ராேல் அல்லது முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பார் எனக்கூறப்படுகிறது. அதே போல, நடிகர் விக்ராந்தும் இந்த படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் என்ற புதுமுகம் நடிக்கிறார்.

அனிருத் இசை:
அனிருத், சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு பெரிய திருப்பத்தை கொடுத்த படம், எதிர்நீச்சல். இந்த படம் முதல், சிவகார்த்திகேயனுக்கு கம்-பேக் படமாக அமைந்த ‘டாக்டர்’ படம் வரை பல படங்களுக்கு அனிருத் இசையமைத்து கொடுத்திருக்கிறார். இந்த கூட்டணியில்தான் தற்போது மதராசி படமும் உருவாகியிருக்கிறது. இதனால் இந்த படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதராஸி OTT விநியோகம்: 
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் மதராஸி படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் OTT விநியோகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தை நெட்ஃப்லிக்ஸ் ரூ. 23 கோடிக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள்..
இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் கமிட்டாகி பணியாற்றி வரும் படம், பராசக்தி. இந்த படத்தை, சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். முக்கிய கதை பாத்திரங்களாக அதர்வா, ஸ்ரீலீலா நடிக்க, நெகட்டிவ் கேரக்டரில் ஜெயம் ரவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அரசியலுக்கு வரும் முன்பே..அரசியல் பேசிய விஜய்யின் பாடல்கள்! அத்தனையும் சூப்பர் ஹிட்

மேலும் படிக்க | தக் லைஃப் படத்தால் லாபமடைந்த ஒரே ஆள்! கமல், மணிரத்னம் இல்லை-யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News