டிஎன்ஏ திரைப்படத்தின் ப்ரொமோஷனுக்காக மதுரைக்கு வருகை தந்த நடிகர் அதர்வா, மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்," மதுரைக்கு வரும்போது எல்லாம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து மீனாட்சி அம்மனை தரிசித்து சொல்வேன். DNA திரைப்படம் Response ஒவ்வொரு ஊராக சென்று பார்த்து வருகிறோம். புகைப்படத்தை பார்த்தவர்களுக்கு நன்றி. பார்க்காதவர்கள் நிச்சயம் சென்று திரையரங்குகளில் பாருங்கள். நடிகர் விஜய் சாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் படிக்க | அரசியலுக்கு வரும் முன்பே..அரசியல் பேசிய விஜய்யின் பாடல்கள்! அத்தனையும் சூப்பர் ஹிட்

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்களின் மாநாட்டிற்கு செல்லவனை திட்டமிட்டு இருந்தோம். ஆனால் மற்றொரு வேலை இருப்பதால் செல்ல இயலவில்லை. எனவே காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்துள்ளோம். இரண்டு மாதங்களில் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையும். டி.என்.ஏ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரையரங்கில் ரசிகர் உடன் சேர்ந்து பார்க்கும் போது அவர்கள் கொண்டாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. படம் பார்த்து கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது. நல்ல படம் எடுத்தால் நல்ல கருத்தை தான் கூறுவார்கள் என நம்புகிறேன். அப்பா இடத்தை பிடிப்பது போன்று அந்த மாதிரி கால்குலேஷன் எல்லாம் இன்று போட முடியாது எனது அப்பா உயிரோடு இருக்கும்போது அதைத்தான் சொன்னார்.
என்னை நீ பின்பற்ற வேண்டாம் உனக்கு பிடித்த பாதையை தேர்ந்தெடுத்து, அதில் பயணி உனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து அந்த படங்களை பண்ணு என்றார். அதைத்தான் நான் தற்போது செய்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தை திரையரங்கில் குறிப்பாக டிஎன்ஏ திரைப்படத்தை பார்க்கும் போது அனைவரும் என்னை பாராட்டுவது சந்தோஷமாக உள்ளது. ன்னுடைய உடலை உடற்பயிற்சிகள் செய்து கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனக்கு பிடித்தமான ஒன்று. அவ்வாறு இருப்பது எனக்கு ஒரு தன்னம்பிக்கை அளிக்கின்றது.இயக்குநர் பாலா சார் என் குடும்பத்தில் ஒருவர். அவரிடம் தொடர்ந்து நெருக்கமாக தான் உள்ளேன் .அவரை அவ்வபோது சந்தித்து பேசுவேன் அவர் கதைக்கு நான் தேவைப்பட்டால் அவரே அழைப்பார். அப்போது நாங்கள் படம் பண்ணுவோம்" என்றார்.
மேலும் படிக்க | தக் லைஃப் படத்தால் லாபமடைந்த ஒரே ஆள்! கமல், மணிரத்னம் இல்லை-யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









