Parasakthi Review: பராசக்தி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம் இதோ!

Dawn பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா நடித்துள்ள பராசக்தி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Jan 10, 2026, 01:45 PM IST
  • இன்று வெளியாகியுள்ள பராசக்தி.
  • சிவகார்த்திகேயன் 25வது படம்.
  • படத்தின் திரைவிமர்சனம் இதோ.
Parasakthi Review: பராசக்தி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம் இதோ!

Dawn பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் பராசக்தி. ஹிந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 வது படமாகும். பொங்கலை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற சர்ச்சைகள் இருந்த போதிலும் இன்று உலகம் முழுவதும் பராசக்தி படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

படத்தின் கதை 

1960 கால கட்டங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. புறநானூறு என்ற மாணவர் படை எப்படி தமிழகத்தில் இந்து திணிப்பை எதிர்த்து போராடியது என்பதை தீவிரமாக பராசக்தி படம் சொல்லி உள்ளது. சிவகார்த்திகேயன் புறநானூறு படையின் தலைவனாக இருக்கிறார். படத்தின் தொடக்கத்தில் ஹிந்தி திணிப்பை எதிர்த்து ரயிலை எறிகின்றனர். அதில் அவரது நண்பன் இறந்து விடுகிறார். இதனால் ஆறு வருடங்கள் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடாமல் இருந்து வருகிறார். இந்த காலகட்டத்தில் அவரது தம்பியான அதர்வா ஹிந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்களை ஒன்று கூட்டி போராட்டம் நடத்துகிறார். இந்த மாணவர்களை எப்படியாவது அடக்க வேண்டும் என்று மத்திய அரசின் அதிகாரியாக வரும் ரவி மோகன் முடிவு செய்கிறார். மாணவர்களின் போராட்டத்தை கலவரமாக மாற்றி அவர்களை எப்படியாவது சுட்டு தள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார் ரவி மோகன். இதற்காக அரசியல்வாதிகளையும், காவல்துறையையும் பயன்படுத்துகிறார். இறுதியில் அவரது எண்ணம் நிறைவேறியதா? தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எப்படி வெற்றிகரமாக முடிந்தது என்பதே இந்த படத்தின் கதை. 

நடிகர்கள் நடிப்பு 

நடிகர் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார். அமரன் படத்தில் உடல் எடையை ஏற்றி ஒரு ராணுவ வீரராக காட்சி அளித்தார். இந்த படத்தில் உடம்பை குறைத்து அந்த காலத்தில் இருந்த இளைஞர் தோற்றத்தில் காணப்படுகிறார். செழியன் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார் சிவகார்த்திகேயன். ஒரு துடிப்பான இளைஞராக அதர்வா அசத்தியுள்ளார், அவர் வரும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகி ஸ்ரீலீலாவிற்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம். அதனை புரிந்து கொண்டு நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பார்ப்பதற்கும் அழகாக காட்சியளிக்கிறார். இந்த படத்தை முக்கியமாக தாங்கி பிடிப்பது ரவி மோகன் தான். அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் நடிப்பு தான் இந்த படத்தை காப்பாற்றுகிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். இவர்களை தாண்டி நிஜக் கதாபாத்திரங்களுக்கு ஒற்றுப் போகும் அளவில் உருவாக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் நன்றாக நடித்துள்ளனர். 

இயக்கம் மற்றும் தொழில்நுட்பம் 

சுதா கொங்கரா ஒரு பீரியட் டிராமா படத்தை முடிந்தவரை நேர்த்தியாக எடுத்துள்ளார். தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து வைத்து தான் சுதா கொங்கரா பராசக்தி படத்தை எழுதி இயக்கியுள்ளார். அந்த காலகட்டத்தில் இந்திய திணிப்பிற்கு எதிராக என்ன மாதிரியான போராட்டங்களும் வன்முறைகளும் தமிழ்நாட்டில் நடந்தது என்பதை இந்த படம் எடுத்து காட்டுகிறது. முதல் பாதி ஆரம்பித்ததில் இருந்து இடைவெளி வரை பரபரப்பாகவே நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் நிறைய இடங்கள் மிகவும் மெதுவாக நகர்வது போல் உணர்வு ஏற்படுகிறது. திரைக்கதையில் இன்னும் சில காட்சிகளை சுவாரசியப்படுத்தி இருக்கலாம். 

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு 100% பலம் சேர்கிறது. சிவகார்த்திகேயன் மாணவர் படைகளை ஒன்றிணைக்கும் காட்சிகளில் வரும் பின்னணி இசை அந்த காட்சிகளை இன்னும் மெருகேற்றுகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகியுள்ள பராசக்தி படம் ஒரு பீரியட் படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக தமிழ் சினிமாவில் இருக்கும். ஒளிப்பதிவு படத்திற்கு ஏற்றவாறு நன்றாக இருந்தாலும் எடிட்டிங்கில் இன்னும் சில காட்சிகளை வேகமாக கொண்டு சென்றிருக்கலாம். சென்சாரில் சில காட்சிகள் நீக்கப்பட்டும், ஒரு சில வசனங்கள் மாற்றி அமைக்கப்பட்டும் உள்ளது. அவை சில குறிப்பிட்டு காட்சிகளின் வீரியத்தை குறைகிறது. 

படம் மொத்தமும் செட்டுக்குள் நடக்கிறது. அது ஒரு சில இடங்களில் மிகவும் அப்பட்டமாக தெரிகிறது. அதே போல அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது படம் பார்க்கும்போது, நாம் என்ன நினைக்கிறோமோ அது தான் நடக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் எதற்காக இதனை செய்கிறார்கள் என்பதை இன்னும் ஆழமாக சொல்லி இருக்கலாம். இன்றைய இளைஞர்களுக்கு ஹிந்தி எதிர்ப்பு என்பது ஆங்காங்கே சில செய்திகளில் கேள்விப்பட்டு இருப்பார்கள். ஆனால் 1960 காலகட்டத்தில் அவை எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதை பராசக்தி எடுத்துக்காட்டுகிறது .நிச்சயம் தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கதை பராசக்தி.

மேலும் படிக்க | பராசக்தி X விமர்சனம் : தீ பரவியதா? பதுங்கியதா? ரசிகர்கள் சொல்வது இதுதான்..

மேலும் படிக்க | ஜனநாயகன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி! பொங்கலுக்கு ரிலீஸ் இல்லையா?

மேலும் படிக்க | ஹப்பாடா..ஒரு வழியாக பராசக்திக்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்! ரசிகர்கள் நிம்மதி..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News