மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ஒன்றானா சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா, வினை, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்சன் பல வருடங்களுக்கு முன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தினை இயக்கினார்.  படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே பாதியுடன் படம் கைவிடப்பட்டது.  அதன் பின் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த தொடங்கினார் நெல்சன்.  அதன் பிறகு மீண்டும் இயக்குனரான நெல்சன் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற டார்க் காமெடி படத்தினை இயக்கினார்.  இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.  தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களமாக இருந்த கோலமாவு கோகிலா ரசிகர்கள் மத்தியில் நெல்சனுக்கு மிக பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. 


அதன் பின் தனது நண்பரான சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தினை இயக்கினார்.  இப்படத்தினை பத்தின அறிவிப்பு வந்த உடனேயே எதிர்பார்ப்பு அதிகமானது.  அனிருத் இசையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.  திரையரங்கா? ஓடிடியா? என்ற குழப்பத்தில் இருந்த படக்குழு ஒரு வழியாக அடுத்த மாதம் 9ம் தேதி  திரையங்கில் படம் வெளியாகும் என்று  அறிவித்தது.  இன்று டாக்டர் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.



யாரவது இந்த மாதுரி ஒரு ஐடியா குடுப்பானா?  என்று தொடங்கும் இந்த ட்ரைலர் மிரட்டலாவே உள்ளது.  சிவகார்த்திகேயனை வேற ஒரு பரிமாணத்தில் காட்ட கூடிய படமாக இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை.  இந்த படத்தையும் டார்க் காமெடி கான்செப்டில் இயக்கி உள்ளார் நெல்சன்.  வில்லனாக வினை ட்ரைலரில் அசத்துகிறார்.  சிவகார்த்திகேயன் மிகவும் அமைதியாக காணப்படுகிறார்.  இந்த அமைதி திரையரங்கில் தெறிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.  ட்ரைலர் சிறிது கோலமாவு கோகிலாவை நியாபக படுத்தினாலும் மாஸாக அமைந்துள்ளது.


 



தற்போது நெல்சன் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தினை இயக்கி வருகிறார்.  தற்போது இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.


ASLO READ Beast படபிடிப்புக்காக டெல்லி வந்த தளபதி விஜயின் வீடியோ வைரல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR