இயக்குநர் பாலா இப்படிபட்டவரா? உண்மையை உடைத்த பிரபலம்

Stant Silva About Director Bala: பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குநர் பாலா குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளது கவனத்தை பெற்று இருக்கிறது. 

Written by - R Balaji | Last Updated : Mar 25, 2025, 06:55 PM IST
  • இயக்குநர் பாலா-வின் வணங்கான் கடந்த ஜனவரி மாதம் வெளியானது
  • இந்நிலையில்ம், அவர் குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்
இயக்குநர் பாலா இப்படிபட்டவரா? உண்மையை உடைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. இவரது படம் வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டிருக்கும். நடிகர் விக்ரமை வைத்து சேது படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, நடிகர் விக்ரமிற்கும் அவரது திரை பயணத்தின் முக்கிய படமாக மாறியது. 

Add Zee News as a Preferred Source

வரிசையாக விருதுகள் 

இதையடுத்து இயக்குநர் பாலா சூர்யாவை வைத்து நந்தா, பிதாமகன், ஆரியாவை வைத்து நான் கடவுள் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். நான் கடவுள் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். இதன் மூலம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார். இவர் இதுவரை 10 படங்களை இயக்கி இருக்கிறார். கடைசியாக இவரது இயக்கத்தில் வனங்கான் படம் கடந்த ஜனவரி மாதம் பொங்களுக்கு வெளியானது. இப்படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் நல்ல வரவேற்பையும் பெற்றது. 

மேலும் படிங்க: புற்றுநோயால் பாதிப்பு! நடிகர் ஷிஹான் ஹூசைனி மரணம்!

இயக்குநர் பாலாவின் படம் வெளியாகி 7 வருடம் ஆனதால் ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்தாக அமைந்தது. முதலில் இப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில், இயக்குநர் பாலா குறித்து பிரபல சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா பேசி இருக்கிறார். அவர் பேசி இருப்பது கவனத்தை பெற்றுள்ளது.   

பாலா மிகவும் நல்லவர் 

அவர் பேசியதாவது, இயக்குநர் பாலவை பார்த்து அனைவரும் பயப்படுவார்கள். ஆனால் அவர் எவ்வளவு நல்லவர் என்பது எனக்கு தெரியும். அவருடன் சேர்ந்து நான் ஒரு படத்தில் வேலை பார்த்தேன். அப்போதுதான் உண்மையாக ஒரு வேலையை எப்படி செய்து என்று கற்றுக்கொண்டேன். அவரை பலரும் கருமையான இயக்குநர் என கூறுவார்கள். ஆனால் பாலா தன்னுடன் வேலை செய்யும் நடிகர்கள், நடிகைகள்,  தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் எப்படி பத்திரமாய் பார்த்துகொள்வார் என்பது அவருடன் வேலை செய்தவர்களுக்கே தெரியும் என கூறினார். 

மேலும் படிங்க: வீர தீர சூரன் படம் எப்படி உள்ளது? வெளியானது முதல் விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News