தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் கொரோனா தடுப்பூசியும் பொதுமக்களுக்கு தொடர்ந்து போடப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், இந்த கொரோனா தடுப்பூசியை (Corona Vaccine) செலுத்தி கொண்டால் அதன் பக்கவிளைவுகள் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மக்களிடையே இன்னமும் சற்று தயக்கம் இருந்து வருகிறது. இந்த தயக்கத்தை போக்கும் விதத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு துறை பிரபலங்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) தனது முதல் கொரோனா தடுப்பூசி டோஸை போட்டுக் கொண்டார். இதுதொடர்பாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்த தொற்றுநோய் எதிராக ஒன்றிணைந்து வெல்வோம் என்று பதிவிட்டுள்ளார். 


ALSO READ | மக்கள் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்யுங்கள்: ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து


 



 


முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. கடந்த ஆண்டு திரைக்கு வந்திருக்கவேண்டிய 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டெளன் காரணமாக கிட்டத்தட்ட ஓர் ஆண்டாகத் தள்ளிப்போனது. 


ஒரு பெரிய இடைவெளிக்குப்பிறகு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி ஐதராபாத்தில் ஷூட்டிங் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மாதம் நடைபெற்ற இப்படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினி இந்தப்படத்துக்கான தனது முழு வேலைகளையும் முடித்துவிட்டார்.


அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். டி.இமான் இசை. வெற்றி ஒளிப்பதிவு. ரூபன் எடிட்டிங்கை கவனிக்கிறார். நவம்பரில் தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR