இந்த தேதியில் ரஜினியின் ஜெயிலர் டப்பிங் ஆரம்பம்..விரைவில் முதல் சிங்கிள்
லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பியவுடன் ’ஜெயிலர்’ படத்தின் டப்பிங் பணிகளை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் டப்பிங் : அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோ கடந்த 6 ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இது குறித்த ஒரு வீடியோவையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தில் இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகை தமன்னாவும் ஜோடியாக நடிக்கிறார். இது, அவருக்கு நடிகர் ரஜினியுடனான முதல் படமாகும். மேலும் பல சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஜெயிலர் படத்தில் நடக்க உள்ளதால் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உள்ளது.
இதற்கிடையே அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுவருவதாகவும் விரைவில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பியவுடன் ’ஜெயிலர்’ படத்தின் டப்பிங் பணிகளை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் தனது பகுதியின் டப்பிங் பணியை தொடங்குவார் என்றும், இதற்கான டப்பிங் முடிந்ததும் அவர் அடுத்த படத்துக்கு தயாராவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா கூடிய விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பே ஜெயிலர் படத்தில் இருந்து முதல் சிங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அத்துடன் ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 ஆம் தேதி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லால்சலாம் மற்றும் ஜெயிலர் படத்தின் பணிகளை முடித்தவுடன் அவர் ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இதற்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். முன்னதாக இதற்கான போட்டோஷூட் ரகசியமாக சென்னையில் நடைபெற்றதாக தகவல் வெளியானது , மேலும் இது தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ