வரும் 18 டிரெய்லர்.. மே 1 பட ரிலீஸ்.. ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட் இதோ

Retro Movie Update: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 15, 2025, 01:36 PM IST
  • நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ.
  • கனிமா பாடல் பட்டித்தொட்டி எங்கு ஹிட்டானது.
  • இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
வரும் 18 டிரெய்லர்.. மே 1 பட ரிலீஸ்.. ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட் இதோ

Suriya 44th Film Retro Movie Update: தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர், நடிகர் சூர்யா. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களிலும், திசா பட்டானி, கருணாஸ், கேஎஸ் ரவிக்குமார், கார்த்தி ஆகியோர் நடித்து இருந்தனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. 

Add Zee News as a Preferred Source

தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த படத்தை சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் கஜித் ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. குறிப்பாக சமீபத்தில் வெளியான கனிமா பாடல் பட்டித்தொட்டி எங்கு ஹிட்டானது. 

அதேபோலவே, இந்த படத்தின் மூன்றாவது பாடலை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த பாடலுக்கு இசையமைத்தது மட்டும் இல்லாமல், இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியும் உள்ளாராம். மேலும், இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். அதன்படி இது தொடர்பான அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனாதி X பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், பாடல் குறித்து பாடலாசிரியர் விவேக், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் விளக்குகிறார். அதன் பின்னர் அந்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாடுகிறார். தி ஒன் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பாடலை சந்தோஷ் நாராயணனுடன் சேர்ந்து சித் ஸ்ரீராம் மற்றும் ஷான் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆனது. மேலும் பாடலும் வைரலானது.

இதனிடையே இப்படம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தின் டிரெய்லர் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகயுள்ளது. மேலும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாகவும், அந்த இசை வெளியீட்டு விழாவிலேயே படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இது தொடர்பாக படக்குழுவினர் பயங்கரமான ப்ரமோஷனை செய்து வருகின்றனர். அதன்படி சற்று முன் வெளியிடப்பட்டுள்ள  ப்ரமோஷன் வீடியோவை இங்கே காணுங்கள்.

மேலும் படிக்க | சூரியுடன் மோதும் சந்தானம்! ஒரே நாளில் வெளியாகும் 2 படங்கள்!

மேலும் படிக்க | OTT-யில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படங்கள்.. எந்த தமிழ் படம் முதல் இடத்தில் இருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News