)
Suriya 45 Movie Title Karuppu : டாப் நடிகரான நடிகர் சூர்யா, சமீபத்தில் கமிட் ஆகி நடித்து முடித்த படம், அவரது 45வது படம் ஆகும். டைட்டில் வைக்கப்படாமல் இருந்த இந்த படத்தை அனைவரும் சூர்யா 45 என்று குறிப்பிட்டு வந்தனர். இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சூர்யா 45 டைட்டில்:
சூர்யாவின் 45வது படத்திற்கு என்ன பெயர் வைக்க இருக்கின்றனர் என்பது குறித்து முன்னரே ஒரு தகவல் இருந்தது. ஆனால், அந்த தகவல்களில் கூறப்பட்ட பெயர் வேறு. இப்போது படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்திருக்கும் போஸ்டரில் படத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Suriya45 is கருப்பு #Karuppu @Suriya_offl pic.twitter.com/ivAj73flOE
— RJ Balaji (@RJ_Balaji) June 20, 2025
படத்திற்கு கருப்பு என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பெயரை ரசிகர்கள் சற்றும் எதிர்பாராததால், இதற்கு பலரும் பலவித ரியாக்ஷன்களை கொடுத்து வருகின்றனர். இந்த போஸ்டரில் சூர்யா கையில் அறிவாளுடன் நிற்கிறார். பின்பக்கம், சிவப்பாகவும் குதிரை ஓடுவது போன்ற காட்சியும் இருக்கிறது. இவை அனைத்தும், படம் எப்படிப்பட்ட கதையாக இருக்கும் எனும் ரசிகர்களின் ஆவலை தூண்டியிருக்கிறது.
பிறந்தநாளை முன்னிட்டு வெளியான போஸ்டர்:
கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜூன் 20ஆம் தேதியான இன்று பிறந்தநாள். இந்த தினத்தையொட்டி, படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டருக்கு கீழ் இணையத்தில் கமெண்ட் செய்து வருபவர்கள் படத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, ஆர்.ஜே.பாலாஜிக்கும் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
சூர்யா 45 அதாவது கருப்பு திரைப்படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையிலும் சென்னையிலும் நடந்தது. இதில் த்ரிஷா, சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
போஸ்டரை கலாய்த்த ரசிகர்கள்:
ஒரு சில ரசிகர்கள், சூர்யாவையும் அவரது இந்த படத்தின் போஸ்டரையும் கலாய்த்து வருகின்றனர். ஒரு சிலர், “கருப்பு என்று படத்திற்கு பெயர் வைத்திருக்கிறீர்கள், ஆனால் போஸ்டர் ரெட் கலரில் இருக்கே..” என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர், போஸ்டரை பார்க்கும் போது எதற்கும் துணிந்தவன் படத்தின் வாடை அடிப்பதாக கூற்றி வருகின்றனர்.
சூர்யாவின் 46வது படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இந்த படத்தை லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ