Suriya Jyothika Daughter Diya to Direct Debut: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து இருவீட்டார்கள் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்டு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு 15 வயதில் தியா என்கிற பெண் குழந்தையும், 12 வயதில் தேவ் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது.
சமீபத்தில் ஜோதிகா மற்றும் சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் இருந்து மும்பைக்கு குடியேறி விட்டார்கள். குறிப்பாக மகளின் படிப்புக்காக மும்பைக்கு குடிபெயர்ந்தாக கூறப்பட்டது. அதேபோல், தியா கடந்த ஆண்டில் தனது படிப்பின் ஒரு பகுதியாக, ஆவணப்படம் ஒன்றை இயக்கினார். லீடிங் லைட் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த ஆவணப் படத்திற்கு மாணவர்கள் அளவிலான குறும்படப் போட்டியில் பரிசு வென்றது. இந்த ஆவணப்படத்திற்கு, சிறந்த திரைக்கதை, சிறப்பு நடுவர் விருது மற்றும் சிறந்த மாணவர் குறும்படம் என மூன்று விருதுகளை வென்றது.
இதனிடையே நேற்று மும்பையில் மகள் தியா பள்ளிப்படிப்பை நிறைவு நடைபெற்றது. இது தொடர்பாக வீடியோ, போட்டோ வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் ஜோதிகா மட்டும் இல்லாமல், சூர்யாவின் பெற்றோர்களான சிவக்குமார் மற்றும் சூர்யாவின் தாயார், அதேபோல் ஜோதிகாவின் பெற்றோர்கள், தியாவின் தம்பி தேவ் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள். இது தொடர்பான வீடியோவை ஜோதிகா மற்றும் சூர்யா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். இவர்களின் இந்த வீடியோ பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, பள்ளி படிப்பை முடித்த தியா, தற்போது தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார். அதாவது அவர் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி இருக்கிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது, மேலும் படத்தில் பெண் டெக்னீசியன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தியா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Thug Life படத்திற்கு தடை? கர்நாடகா பிலிம் சேம்பர் அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









