Suriya 44th Film Retro Pre Booking Collections: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் ப்ரீ புக்கிங் இல் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.
தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர், நடிகர் சூர்யா. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களிலும், திசா பட்டானி, கருணாஸ், கேஎஸ் ரவிக்குமார், கார்த்தி ஆகியோர் நடித்து இருந்தனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.
தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த படத்தை சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் கஜித் ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. குறிப்பாக சமீபத்தில் வெளியான கனிமா பாடல் பட்டித்தொட்டி எங்கு ஹிட்டானது. மேலும் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து.
Here is the trailer of #Retro
Tamil - https://t.co/yfk6mhlE1l
Telugu - https://t.co/di749tNEQg
Hindi - https://t.co/brmKWNRzv7#TheOne From May One ! #RetroTrailer#RetroAudioLaunch #LoveLaughterWar #RetroFromMay1 pic.twitter.com/akMeTpkkC5
— karthik subbaraj (@karthiksubbaraj) April 18, 2025
இந்நிலையில் வருகிற மே 1 ஆம் தேதி சூரியாவின் ரெட்ரோ படம் வெளியாகவிருக்கிறது. தற்போது இந்த படத்தின் ப்ரீ புக்கிங் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் தற்போது வரை ப்ரீ புக்கிங் மூலம் ரூ. 15 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
With might and fury, The One will strike in 6 Days #RetroFromMay1 #LoveLaughterWar@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_A @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas @cheps911 @jacki_art #MayaPandi @JaikaStunts… pic.twitter.com/HurkikWy7x
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 25, 2025
#Retro rewind
@Suriya_offl annan pic.twitter.com/NvzVc5ffXE
— Sakthivelan B (@sakthivelan_b) April 25, 2025
மேலும் படிக்க | ரெட்ரோ படத்தில் நடிக்க தேர்வான முதல் ஹீரோ..சூர்யா இல்லை! வேறு யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









