இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரெட்ரோ. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சு,ப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் ஷ்ங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே பழைய கார்கள், துப்பாக்கிகள் இடம் பெற்றிருக்கும். படமும் வித்தியாசமான கதைகளத்தை கொண்டிருக்கும். இப்படம் அதேபோலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிக்காததற்கு சூர்யாதான் காரணமா? அவரே சொன்ன பதில்!
டீசரை தொடர்ந்து படத்தில் இடம் பெற்றிருக்கும் கண்ணாடி பூவே பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. அப்பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாடல் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இப்பாடல் வரும் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள்
மதுரையில் 1983 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி பிறந்த இவர், சினிமா மீது ஆர்வம் கொண்டு குறும்படங்களை இயக்கி வந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், பீட்சா படத்தை இயக்கி வெளியிட்டார். முதல் படமே ஹிட்டானதை தொடர்ந்து, சித்தார்த்தை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பின்னர் இறைவி, பேட்ட, மகான் என ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார். தற்போது ரெட்ரோ ஷுட்டிங் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்ஸன் வேலைகள் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு ரெட்ரோ படம் தொடர்பான அப்டேட்டை கொடுத்துள்ளார்.
மேலும் படிங்க: இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









