Ayan Movie Hero First Choice Actor : 2009ஆம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், அயன். இதில் சூர்யா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக தமன்னாவும், பிற முக்கிய கதாப்பாத்திரங்களில் ஜகன், பிரபு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். வில்லனாக ஆகாஷ்தீப் நடித்திருந்தார். இந்த படம் குறித்து பிரபல ஹீரோ ஒருவர் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
அயன்:
கொக்கைன் என்ற வார்த்தையையே பல 90s மற்றும் 2K குழந்தைகள் அயன் படத்தில் இருந்துதான் கேள்வி பட்டிருப்பர். காரணம், இந்த படம், போதைப்பொருள் கடத்தலை மையமாக கொண்டுதான் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில், சூர்யா துருதுருவென இருக்கும் கடத்தல் இளைஞர் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். தமன்னா அவருடன் ரெமேன்ஸ் செய்யும் காதலியின் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம், விமர்சகர்களால் வறுத்தெடுக்கப்பட்டாலும், ரசிகர்களின் பலத்த வரவேற்பினை பெற்றது. இதில், நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகர் சூர்யா இல்லையாம், வேறு யார் தெரியுமா?
இவருதான் அந்த நடிகர்!
அயன் படத்தில் முதலில் நடிக்க முதல் சாய்ஸ் ஆக இருந்தவர், சூர்யா இல்லை, ஜீவாதான். இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்த அவர், இந்த தகவலை கூறியிருக்கிறார். அதில் பேசிய அவர், கற்றது தமிழ் திரைப்படம் வெளியாகி, தோல்வியில் இருந்த சமயத்தில் இயக்குநர் கே.வி.ஆனந்த் தனக்கு கால் செய்து உடனே ஒரு படம் பண்ணலாம் என்று கூறியதாகவும், இது குறித்து நேரில் சந்தித்து பேசலாம் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், சில காரணங்களால் இந்த மீட்டிங்கும் பட வாய்ப்பும் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. அப்படியே இந்த வாய்ப்பு சூர்யாவிற்கும் சென்றிருக்கிறது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்த படம்..
இயக்குநர் கே.வி.ஆனந்த், தமிழ் திரையுலகில் சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர்களுள் ஒருவர். அதையும் தாண்டி, திறமையான கேமரா மேனும் கூட. அயன் படத்திற்கு பிறகு ஜீவாவை வைத்து, கே.வி.ஆனந்த் இயக்கிய படம், “கோ”. இந்த படம், பலருக்கு தானும் பத்திரிகையாளராக மாற வேண்டும் உந்துதல் கொடுத்த திரைப்படம் ஆகும். இந்த படமும் பெரிய ஹிட் அடித்தது.
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிளாக் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படம் மட்டுமல்லாது அவர் தெலுங்கில் யாத்ரா 2 எனும் படத்திலும் நடித்தார். இப்போது அவர் நடிப்பில் அகத்தியா என்ற படம் வெளியாகி இருக்கிறது. இதில் அவர் 2 வேடங்களில் நடித்திருக்கிறார்.
திரையுலகிற்கு வந்த புதிதில் கொஞ்சம் பிசியாக இருந்த ஜீவாவின் மார்கெட், இப்போது கொஞ்சம் மந்தத்தில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும், தன்னிடம் வரும் கதைகளில், சிலவற்றை மட்டும் ஃபில்டர் செய்து, தனக்கு செட் ஆகும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர், மீண்டும் சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை போன்ற படங்களை போல, ஒரு ஜாலியான கதையில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | 96 படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்-விஜய் சேதுபதி இல்லை! ‘இந்த’ பிரபல நடிகர்தான்..
மேலும் படிக்க | GOAT படத்தில் விஜய்க்கு பதில் ஹீரோவாக நடிக்க இருந்தவர்! ‘இந்த’ பிரபல ஹீரோவா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









