ரெட்ரோ vs டூரிஸ்ட் ஃபேமிலி! இரண்டில் எந்த படம் பெஸ்ட்? எதை முதலில் பார்ப்பது?

Retro Vs Tourist Family Which One Is Good : சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெட்ரோ திரைப்படமும், சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இதில், மக்களை கவர்ந்த படம் எது தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : May 2, 2025, 03:34 PM IST
  • ரெட்ரோ vs டூரிஸ்ட் ஃபேமிலி
  • இரண்டில் எந்த படம் பெஸ்ட்?
  • எதை முதலில் பார்ப்பது?
ரெட்ரோ vs டூரிஸ்ட் ஃபேமிலி! இரண்டில் எந்த படம் பெஸ்ட்? எதை முதலில் பார்ப்பது?

Retro Vs Tourist Family Which One Is Good : தொடர் விடுமுறை நாட்களை குறிவைத்து, திரைப்படங்கள் ரிலீஸாவது வழக்கம். மே 1 உழைப்பாளர் தினத்தையும், வீக்-எண்ட் மற்றும் கோடை விடுமுறை நாட்களை குறிவைத்து தமிழில் 2 படங்கள் நேற்று வெளியாகின. இவை இரண்டுமே மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை தூண்டிய படங்களாகும். இவற்றில் மக்களுக்கு அதிகம் பிடித்திருக்கும் படம் எது தெரியுமா?

Add Zee News as a Preferred Source

ரெட்ரோ ரிலீஸ்:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் ரெட்ரோ. கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். 80-90களில் நடப்பது போன்ற இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. கதாப்பாத்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடியில் இருப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சூர்யா, இந்த படத்தில் பாரி எனும் கதாப்பாத்திரத்திலும், பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக ருக்மிணி எனும் கேரக்டரிலும் நடித்திருக்கிறார் ஜாேஜு ஜார்ஜ் இந்த படத்தில் சூர்யாவிற்கு தந்தையாக நடித்திருக்கிறார். கூடவே ஜெயராம், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

டூரிஸ்ட் ஃபேமிலி:

புதுமுக இயக்குநர் அபிஷான் ஜீவிந் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம், டூரிஸ்ட் ஃபேமிலி. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது, இதனால் அங்கிருந்து கள்ளப்படகு மூலமாக ஒரு குடும்பம் தமிழ்நாட்டிற்கு வருகிறது. வரும் இடத்தில் இவர்களுக்கே தெரியாமல் ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்கின்றனர். அதிலிருந்து தப்பித்தார்களா? என்பதுதான் கதை.

 

குட் நைட், லவ்வர் என ஃபீல் குட்-காதல் டிராமாக்களை தயாரித்திருந்த நிறுவனம், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ். இவர்களின் மூன்றாவது படம்தான், டூரிஸ்ட் ஃபேமிலி. இதில் சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்திருந்தார். மகன்களாக மிதுன், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ vs டூரிஸ்ட் ஃபேமிலி:

இரு படங்களுமே, ஒரே நாளில் இறங்கியிருப்பதற்கு வசூல் ஒரு பெரிய காரணம். அதைத்தாண்டி, ரெட்ரோ ஒரு பெரிய ஹீராேவின் பெரிய பட்ஜெட் படம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதனுடன் போட்டியாக இறங்கியது மிக குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படமான டூரிஸ்ட் ஃபேமிலிதான். இதில், ரெட்ரோ படம் கல்ட்-க்ளாசிக் ஆக இருப்பதால் இந்த படத்தை ஆக்ஷன்-கதை விரும்பிகளுக்கும், கலர்ஃபுல்லான கதை வேண்டும் என்று கூறுபவர்களுக்கும் பிடிக்கும். ஆனால், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் குடும்ப ரசிகர்களை எளிதாக தியேட்டர் பக்கம் ஈர்க்கவல்லது.

இரண்டில் எது மக்களுக்கு பிடித்துள்ளது?

ரெட்ரோ படத்தில் சூர்யாவின் நடிப்பு, சூப்பரான நடிகர்கள், அசத்தும் சண்டை காட்சிகள் என அனைத்தும் இருந்தாலும், நேர்த்தியற்ற திரைக்கதையால் படம் தொய்வாக இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர். முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி அதற்கு அப்படியே நேரெதிராக இருப்பதாகவும் சிலர் கூறினர். பூஜா ஹெக்டேவின் கதாப்பாத்திரத்தை வீணடித்து விட்டதாகவும் கூட பேச்சுகள் எழுந்தன.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இசை, காமெடி, கதை, காட்சியமைப்பு என அனைத்திற்கும் படம் பார்த்தவர்கள் நல்ல மார்க் கொடுத்துள்ளனர். இந்த படத்தில் எந்தவிதமாக கட்டயாக நகைச்சுவை காட்சிகள் எதுவும் இல்லை. இயல்பாக, வாழ்வியலில் நடக்கக்கூடிய விஷயங்களையே படத்தில் கூறியிருக்கின்றனர். கூடவே சில கதாப்பாத்திரங்கள் படத்தில் நடத்தும் லூட்டிகள் மக்களை கவர்ந்துள்ளது. 

இவை இரண்டில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு சென்றவர்கள் கண்டிப்பாக அந்த படத்தை சென்று பாருங்கள் என பிறரிடம் கூறி வருகின்றனர்.

முதல் நாள் வசூல்…

தமிழகத்தில் மட்டும் ரெட்ரோ படம் சுமார் ரூ.17.5 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரூ.2 கோடி கலெக்ட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க | ரெட்ரோ முதல் நாள் வசூல்..ஒன்னும் பெருசா இல்லையா? மொத்த கலக்ஷன் எவ்வளவு?

மேலும் படிக்க | சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News