)
Retro Vs Tourist Family Which Is Going To Win : தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படங்கள், விரைவில் வெளியாக இருக்கின்றன. அப்படி எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய திரைப்படங்கள் மே 1ஆம் தேதியான நாளை வெளியாக இருக்கிறது. இது இரண்டில் ஜெயிக்கப் போவது யார்?
ரெட்ரோ:
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா முதன் முறையாக நடித்திருக்கும் படம், ரெட்ரோ. 90களில் நடக்கும் கதை போல, இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கூடவே மலையாள நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களாக வருகின்றனர்.
மெட்ரோ திரைப்படத்தின், கண்ணாடி பூவே மற்றும் கனிமா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கங்குவா படம் சூர்யாவை தவிர்த்து விட்டு நிலையில், ரெட்ரோ அவரை தூக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி:
கோலிவுட்டில் கடந்த சில வருடங்களாகவே பீல் குட் திரைப்படங்கள் வெளியாவது குறைந்துவிட்டது. அப்படி அரிதாக வெளியாகும் பீல் குட் திரைப்படங்களில் ஒன்று டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை புதுமுக இயக்குனர், அபிஷான் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். இவருக்கு 24 வயதுதான் ஆகிறது.
இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட ஒரு முக்கிய கதை பாத்திரங்களில் நடிக்கின்றனர். கொரோனா பேரிடர் காலத்தில், இலங்கையில் வசிக்கும் ஒரு தமிழ் குடும்பம் அந்நாட்டின் பொருளாதார சிக்கலால் பல பிரச்சினைகளை சந்திக்கிறது. இதிலிருந்து தப்பிக்க அவர்கள் வேறு நாட்டிற்கு செல்ல நினைக்கின்றனர். இதை அவர்கள் எப்படி சமாளித்தார்கள் என்பதே கதை.

இரண்டு படங்களுக்கும் கிடைத்துள்ள ஆடியன்ஸ்..
ரெட்ரோ படத்தை எடுத்துக் கொண்டால் அது முழுக்க முழுக்க ஒரு கல்ட்-கிளாசிக், ஆக்சன் டிராமாவாக இருக்கிறது. அது மட்டுமன்றி, சூர்யாவை “ரோலக்ஸ்” போன்ற ஒரு தோற்றத்தில் பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். இது அந்த அளவிற்கு வில்லத்தனமான ரோல் இல்லை என்றாலும், அவரது 100% இந்த படத்தில் உபயோகத்திற்காக என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதைப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எடுத்துக் கொண்டால், வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினருக்கும் புரியும் மற்றும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலரில் இடம்பெற்றிருக்கும் இசை மற்றும் காட்சி அமைப்புகளும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமன்றி இந்த படத்தின் பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்தியேக காட்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் படத்தைப் பார்த்தவர்கள் வெகுவாக இதற்கு விமர்சனத்தை தெரிவித்து இருக்கின்றனர். எனவே, ரெட்ரோ போன்ற பெரிய பட்ஜெட் படத்துடன் மோதினாலும், இது கண்டிப்பாக வெற்றி பெறும் என கூறப்படுகிறது. ரசிகர்கள் இந்த படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
இந்த இரு படங்களுமே, தாங்கள் நினைத்த தரப்பு ரசிகர்களை ரீச் செய்து ஹிட் ஆகும் என சினிமா துறையில் ஆக்டிவாக இருக்கும் நபர்கள் பேசிக்கொள்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ