நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் கடந்த மார்ச் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். இப்படத்தின் மூலம் இயக்குநராக ஸ்வினீத் எஸ். சுகுமார் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையும் அமைத்துள்ளார். கதாநாயகியாக கோபிகா ரமேஷ் நடித்துள்ளார். மேலும், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உறவுகள் குறித்தும், ஒரு காதல் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் உணர்ச்சிப்பூர்வமாக இப்படத்தில் கூறப்பட்டிருந்தது. இப்படம் மக்கள் மத்தில் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எனவே இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க தவரியவர்கள், ஓடிடி தளத்தில் பார்த்து ரசியுங்கள்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் ரியோ ராஜ். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரில் ஒருவராக உள்ளார். முன்னதாக ஜோ படத்தில் நடித்திருந்தார் ரியோ ராஜ். அப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது வெளியான ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் அவருக்கு ஒரு அவரேஜான படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: ரெட்ரோ படத்தின் டிரெய்லர் எப்போது? வெளியான அப்டேட்!
மேலும் படிங்க: அஜித் ரசிகர்களுக்கு ஷாக்.. குட் பேட் அக்லி முதல் காட்சி ரத்தா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









