கைது செய்யப்பட்ட பிக் பாஸ் பிரபலம் தர்ஷன்! காரணம் என்ன?

Bigg BossTharshan Got Arrested : பிக்பாஸ் தர்ஷன், சமீபத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு காரணம் என்ன தெரியுமா?

Written by - Yuvashree | Last Updated : Apr 4, 2025, 06:31 PM IST
  • பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது!
  • நீதிபதியின் மகனை தாக்கினாரா?
  • என்ன நடந்தது? முழு விவரம்!
கைது செய்யப்பட்ட பிக் பாஸ் பிரபலம் தர்ஷன்! காரணம் என்ன?

Bigg BossTharshan Got Arrested : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் தற்போது திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் முகப்போர் பகுதியில்  வசித்து வரும் நிலையில் அவர் தங்கியிருக்கும் வீட்டின் அருகே டீக்கடை ஒன்று இருப்பதாக தெரிகிறது இந்த நிலையில் டீ கடைக்கு டீ குடிக்க வந்த ஒரு தரப்பினர் பிக் பாஸ் தர்ஷன் வீட்டின் முன்பு காரை நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

இதனால் தர்ஷனால் தன்னுடைய வீட்டிற்குள் போக முடியவில்லை என்று வாக்குவாதம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் தர்ஷனை சிலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல தர்ஷன் தாக்கியதாகவும் எதிர் தரப்பினர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

இதில் தாக்கப்பட்டவர் நீதிபதியின் மகன் என்று தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மகேஸ்வரி மற்றும் நீதிபதியின் மகன் ஆதிசுடி இருவரும் ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் தர்ஷன் மீதும் அவருடைய உறவினர்கள் மீதும் புகார் கொடுத்து இருக்கிறார்கள். புகாரை தொடர்ந்து தர்ஷனிடம் ஜே ஜே நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தர்ஷன் தாக்கியதாக ஆதிசூடி மற்றும் நீதிபதி மகேஸ்வரி ஆகிய இருவரும் அண்ணா நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தர்ஷனின் இந்த விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசல் கோளாருக்கு ஏற்பட்ட பிரச்சனை!

சில நாட்களுக்கு முன்பு, இன்னொரு பிக்பாஸ் பிரபலமான அசல் கோளாறும் ஒரு பிரச்சனையில் சிக்கினார். இவரது  நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து வந்து சென்னையில் தங்கியிருந்ததாகவும், அப்போது அவரது பாஸ்போர்ட்-விசாவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக விமான நிலைய அதிகாரிகள் இவரிடம் நடத்திய விசாரணை சரியில்லை என்றும் கூறியிருந்தார். தனது நண்பரை அவர்கள் அடித்து துன்புருத்தியதாகவும் கூறியிருந்தார். இப்படி, பிக்பாஸ் பிரபலங்கள் பலர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியிருப்பது குறித்து ரசிகர்கள் பரவலாக பேசிக்கொன்கின்றனர்.

மேலும் படிக்க | இதுவரை பிக்பாஸ் டைட்டில் வென்ற பிரபலங்கள்..இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

மேலும் படிக்க | பிக்பாஸ் பிரபலங்கள் நடித்துள்ள ஃபையர் படத்தின் இசை வெளியீடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News