Tamil Films Releasing On May 16th 2025 : தமிழ் திரையுலகில் விடுமுறைகளை குறிவைத்து அவ்வப்போது திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அப்படி, சம்மர் விடுமுறையை குறிவைத்து, வரும் 16ஆம் தேதியை குறிவைத்து சில படங்கள் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
மாமன்:
இதுவரை காமெடி நடிகராக இருந்த சூரி, இப்போது ஹீரோ மெட்டீரியலாகவும் மாறி விட்டார். விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்த பின்பு, இவரை தேடி வந்த அனைத்துமே ஹீரோ பட வாய்ப்புகள்தான். அவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடித்திருந்த கொட்டுக்காளி திரைப்படமும் ஓரளவிற்கு நல்ல வரவேற்பினை பெற்றது. இதைத்தொடர்ந்து, விடுதலை படத்தின் 2ஆம் பாகத்திலும் நாயகனாக நடித்திருந்தார்.
சூரி, ஹீரோவாக நடித்திருக்கும் இன்னொரு படம், மாமன். இந்த படத்தை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருக்கிறார். கூடவே முக்கிய கதாப்பாத்திரங்களில் ஸ்வாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில், தாய் மாமனுக்கும், மருமகனுக்காக பாசம் குறித்து பேசப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் மக்கள் மத்தியல் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படம், சம்மர் ரிலீஸாக, வரும் மே 16ஆம் தேதி தமிழ் நாட்டில் ரிலீஸாக இருக்கிறது.
டிடி நெக்ஸ்ட் லெவல்:
காமெடியனாக இருந்த சந்தானம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார். இவருக்கு இது வெற்றியை தேடித்தர, அதையே தற்போது வரை தொடர்ந்து வருகிறார். இவர் நடித்த தில்லுக்கு துட்டு பேய் படமும் இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதே பெயரில் தொடர்ந்து பல காமெடி பேய் படங்களில் நடித்தார். அந்த வகையில், தற்போது அவர் நடித்திருக்கும் படம், டிடி நெக்ஸ்ட் லெவல். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியிருக்கிறார். இது, ஒரு நல்ல குடும்ப எண்டர்டெயினர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரைலரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தை மே 16ஆம் தேதி தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.
ஜோரா கைய தட்டுங்க:
காமெடி நடிகராக இருந்து கொண்டு, ஹீரோவாகவும் நடிப்பவர், யோகி பாபு. இவர் கதாநாயகனாக நடித்திருக்கும் புது படம், ஜோரா கைய தட்டுங்க. இந்த படத்தை வினீஷ் மில்லேனியம் இயக்கியிருக்கிறார். இது ஒரு மந்திரவாதியை பற்றிய கதை. ஒரு மகன், தனது தந்தையின் கனவுகளை காப்பாற்றுவதற்காக போராடுகிறார். இதை பார்க்க, ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இதுவும் மே 16 அன்று வெளியாகிறது.
இந்த 3 திரைப்படங்களுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா? இவை மூன்றிலுமே காமெடி நடிகர்கள்தான் ஹீரோவாக நடித்துள்ளனர். இவர்கள் மூன்று பேரின் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால், தியேட்டர்கள் கொடுப்பதில் கடும் பாேட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மே1-ஆம் தேதி ரிலீஸாகும் 4 மரண மாஸ் திரைப்படங்கள்! எதை முதலில் பார்ப்பது?
மேலும் படிக்க | மே 1 ரிலிஸான 3 மாஸ் திரைப்படங்கள்! வசூலில் யார் டாப்? மக்களை கவர்ந்த படம் எது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ