)
நவீன் டி கோபால் இயக்கத்தில் உருவாகி உள்ள காதல் படம் தான் உசுரே. இப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. உசுரே படத்தில் டீஜய் அருணாச்சலம் மற்றும் ஜனனி குணசீலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தங்கதுரை, மந்த்ரா மற்றும் ஸ்னேதிகுமாரி ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரண் ஜோஸ் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை சாய் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை மணிமாறன் செய்துள்ளார். உசுரே படத்தை மௌலி எம் ராதா கிருஷ்ணா தயாரித்துள்ளார்.
#Usurae Releases Tomorrow pic.twitter.com/F1VCCdxULl
— TeeJay Arunasalam (@Iamteejaymelody) July 31, 2025
படத்தின் கதை
ஆந்திரா எல்லை பகுதியில் நடக்கும் வித்தியாசமான காதல் கதையாக உசுரே உருவாகி உள்ளது. படத்தின் கதாநாயகன் டீஜே அருணாச்சலம், தனது காதல் மனைவிக்கு ஒரு காதல் கதையை சொல்லிக்கொடுக்க மலை ஏறுகிறார். குவாரியில் வேலை பார்த்து வரும் நாயகன் அருணாச்சலம், எதிர்வீட்டில் குடி வந்த ஜனனியை காதலிக்கிறார். இது ஜனனியின் அம்மா மந்த்ராவுக்கு பிடிக்கவில்லை. இதனால், டீஜே மீது நேரடியாகவும், செருப்படியாகவும் பல்வேறு அவமானங்களை செய்கிறார். இறுதியில் என்ன ஆனது? அவர்கள் காதல் வெற்றி பெற்றதா என்பதே உசுரே படத்தின் கதை.
நடிகர்கள் நடிப்பு
அசுரன் படத்திற்கு பிறகு, உசுரே படத்தில் டீஜே அருணாச்சலம் காதலுக்காக துணிந்து நிற்கும், எதையும் செய்யும் இளைஞராக அழுத்தமாக நடித்துள்ளார். தனது நடிப்பால் படத்திற்கு ஒருவித உயிரோட்டத்தை கொடுக்க முயற்சிக்கிறார். மறுபுறம் நடிகை ஜனனிக்கு இன்னும் நடிப்பு பயிற்சி தேவை. திரையில் பார்க்க அழகாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தை தாங்கி நிற்கும் அளவிற்கு நடிப்பு இல்லை. மந்த்ரா வில்லியாக மீண்டும் ஒரு முறை அசத்தி உள்ளார். இருப்பினும் பல வில்லிகளின் நியாபகம் வந்து செல்கிறது. கிரேன் மனோகர், செந்தி தம்பதியாக நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். ஆதித்யா கதிர் மற்றும் தங்கதுரையின் நகைச்சுவைக் காட்சிகள் கதையின் சீரியஸான போக்கிற்கு இடையே சிறிது ஆறுதல் அளிக்கின்றன.
தொழில்நுட்பம்
ஒளிப்பதிவும், இசையும் கதையின் தேவைக்கேற்ப உள்ளது. காதலுக்காக நடக்கும் பிரச்சனை சற்று வித்தியாசமான கோணத்தில் இப்படத்தை திரைக்கதை அமைத்துள்ளது. படத்தின் இறுதிக் காட்சிகள் சில எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்து, தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இருப்பினும், படத்தின் குறைகள் இந்த நிறைகளை எளிதாக மறைத்துவிடுகின்றன. தாய்-மகள் பாசப் போராட்டம், காதலனின் தவிப்பு என பல உணர்வுபூர்வமான விஷயங்களை ஆழமாகப் பதிவு செய்யத் தவறியுள்ளது எழுத்து. அதேபோல சித்தூரின் தனித்துவமான தமிழ்-தெலுங்கு கலந்த கலாச்சாரப் பின்னணியைப் பயன்படுத்தத் தவறியது ஒரு பெரிய பலவீனம். டீஜெய் அருணாசலத்தின் நடிப்புக்காக இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ