)
Actor Ponnambalam Thanked Celebrities : சினிமாவை பொருத்தவரை, ஒரு ஹீரோ நடிகரை எப்படி நாம் மறக்காமல் இருப்போமோ, அதே போல வில்லன் நடிகர்களையும் மறக்காமல் இருப்போம். அப்படி, பலரது மனங்களில் பயங்கர வில்லன் நடிகராக பதிந்து போனவர் பொன்னம்பலம். பல படங்களில் அடிதடி ஆளாகவும், வில்லனாகவும் நடித்துள்ள இவர், இப்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது தோற்றமே மாறியிருக்கிறது.
பொன்னம்பலம்:
நடிகர் பொன்னம்பலம், அபூர்வ சகோதரர்கள் படம் வந்த புதிதில் இருந்தே நடித்து வந்தாலும் அவரை முத்து மற்றும் நாட்டாமை படம் மூலம்தான் ரசிகர்கள் பெரிதாக தெரிந்து கொண்டனர். முத்து படத்தில் காளி எனும் பயங்கர அடியாளாக வரும் இவர், படத்தின் நெகடிவ் கதாப்பாத்திரங்களுள் முக்கியமான ஒருவராக இருப்பார். நாட்டாமை படத்தில் முக்கிய வில்லனே இவர்தான்.
இப்படி, அந்த கால ஹீரோக்களான கமல், ரஜினி முதல், இந்த கால ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா வரை பலரது படங்களில் இவர் நடித்துள்ளார். 90களில் பிறந்தவர்கள் இன்றும் இவரை தமிழ் சினிமாவின் பயமுறுத்தும் வில்லன்களுள் ஒருவராகத்தான் பார்க்கின்றனர். பொன்னம்பலம் இதுவரை, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்கப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதி:
சினிமா ஸ்டார்களின் வாழ்க்கை ஒரு நாளில் இருப்பது போல, மறுநாளும் இருப்பதில்லை. அப்படி, பொன்னம்பலமும் சில நாட்கள் ஏழ்மை நிலையை சந்தித்திருக்கிறார். இவருக்கு கடந்த 2023ஆம் ஆண்டு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை மேற்கொள்ள இவருக்கு போதிய பணம் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, தனக்கு உதவுமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதை பார்த்த நடிகர் சிரஞ்சீவி, அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அதன் பிறகு, உடல் நிலை கொஞ்சம் தேரியது.

இப்போது நடிகர் பொன்னம்பலத்திற்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பார்த்த இவருக்கு இப்போது அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இது எந்த மாதிரியான ட்ரீட்மெண்ட் என்பதை ஒரு உருக்கமான ஆடியோ பதிவு மூலம் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
சிரஞ்சீவி, சரத்குமார், தனுஷ், நிழல்கள் ரவி, மோகன், கமல்ஹாசன், சிம்பு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் தனக்கு உதவியதாக அந்த ஆடியோவில் பொன்னம்பலம் குறிப்பிட்டு இருந்தார். தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்று கூறிய அவர், தனக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது இப்படி..
ஒரு காலத்தில் கட்டுமஸ்தான உடலுடன், பயங்கர வில்லனாக வலம் வந்த இவர், இப்போது இப்படி மாறியிருப்பது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. அவர் மீண்டு வர வேண்டும் என்று பலரும் இணையதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ