தலைவர் 173 அப்டேட்: ஷூட்டிங் தொடங்குவது எப்போது? படத்தின் கதை என்ன?

Thalaivar 173 Mega Update : ‘தலைவர் 173’ திரைப்படம் குறித்து, நடிகர் ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jan 16, 2026, 12:06 PM IST
  • தலைவர் 173 திரைப்பட அப்டேட்
  • படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?
  • முழு விவரம்!
தலைவர் 173 அப்டேட்: ஷூட்டிங் தொடங்குவது எப்போது? படத்தின் கதை என்ன?

Thalaivar 173 Mega Update : ரஜினிகாந்த், அவரது 173வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அப்டேட் குறித்து, நடிகர் ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

தலைவர் 173:

நடிகர் ரஜினிகாந்த், ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம், அவரது 173வது படமாகும். இப்படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதனை, கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் அப்டேட்டை, தற்போது கமல்ஹாசன் பகிர்ந்திருக்கிறார்.

ரஜினிகாந்த் பகிர்ந்த அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தான் நடிக்கப்போகும் படம் குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார். பொங்கல் பண்டிகையின் போது ரசிகர்களை சந்தித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்றும், இப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெயினராக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். சிபி சக்கரவர்த்தி, இதற்கு முன்னர் ஒரே ஒரு படத்தைதான் இயக்கி இருக்கிறார் என்பதால், அவரது கதையை எப்படி ரஜினிகாந்த் ஓகே செய்தார் என்பது குறித்த குழப்பம் நிலவி வந்தது. இதையடுத்து, கமலின் பதில், இது ரஜினிக்கு சரியான கதையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

பிசியாக இருக்கும் ரஜினிகாந்த்:

நடிகர் ரஜினிகாந்த், வருடத்திற்கு ஒரு படத்தில் நடிப்பது, ஒரு படத்தை ரிலீஸ் செய்வது என்கிற தனது பாலிசியில் நிலையாக இருக்கிறார். கடந்த ஆண்டு கூலி படம் ரிலீஸான போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வந்தார். இந்த ஆண்டு, ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பின்னர் தனது 173வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதை அடுத்து, இதனை தியேட்டரில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

சுந்தர்.சி விலகியது ஏன்?

தலைவர் 173 படத்தை முதலில் இயக்க இருந்தது பிரபல இயக்குநரான சுந்தர்.சிதான். ஏற்கனவே மூக்குத்தி அம்மன் 2 உள்பட சில படங்களில் பிசியாக இருந்த அவர், தலைவர் 173 படத்தையும் இயக்க சைன் செய்தார். ஆனால் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, தான் இந்த படத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் விலகி கொள்வதாக அறிவித்தார். இது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இதையடுத்து, இவர் விலகியது ஏன் என்பது குறித்து, சம்பந்தப்பட்ட யாரும் வாய் திறக்கவில்லை. இருப்பினும், திரை வட்டாரங்களில் சுந்தர்.சி விலகியதற்கான காரணம் என்ன என்பது குறித்தஒர தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.

அதாவது, ரஜினிகாந்த் சுந்தர்.சியின் கதையை ‘ஒன் லைன்’ கேட்டு விட்டு ஓகே சொன்னதாக தெரிகிறது. அறிவிப்பு வெளியான பின்பு, சுந்தர்.சி முழு கதையையும் கூறுகையில் அது தனக்கு செட் ஆகாது என்று நினைத்த ரஜினி, கதையை தனக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யமாறு கேட்டிருக்கிறார். சுந்தர்.சி-க்கு ரஜினி கூறிய விஷயம் செட் ஆகாததால், இறுதியில் இப்படியொரு அறிவிப்பு வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், கமல் இது குறித்து பேசுகையில் தாமரை இலையில் நீர் போல, சுந்தர்.சி விஷயம் குறித்து எதிவும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - ஜனநாயகன் விவகாரம்: மேல்முறையீடு மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் அதிரடி

மேலும் படிக்க - விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு.. ஜனநாயகன் விவகாரத்தில் செம ட்விஸ்ட்.. கூட்டணி கன்ஃபார்ம்?

மேலும் படிக்க - ஜனநாயகன் சென்சார் பிரச்சனை: நடந்தது என்ன? உண்மையை புட்டு புட்டு வைக்கும் தயாரிப்பாளர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News