தளபதி விஜய் சில வருடங்களுக்கு முன்பு நடித்த பல ஹிட் படங்கள், இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கும் தியேட்டர் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் அவ்வப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் விஜய்யின் சூப்பர் சூப்பர் ஹிட் படமான கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் வாரி குவித்தது. சில மாதங்களுக்கு முன்பு விஜய் நடித்த சச்சின் திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றது.
அந்த வகையில் தற்போது விஜய்யின் 51வது பிறந்தநாளை (ஜூன்-22) கொண்டாடும் விதமாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2017ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மெர்சல் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ஜூன்-20 தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் (Sparrow Cinemas) ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன் வெளியிட்டுள்ளர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டாலும் அனைத்து இடங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு ஹவுஸ்புல் போர்டுடன் காட்சியளிக்கிறது.
மேலும் படிக்க | ஜூன் to நவம்பரில் வெளியாகும் மாஸ் தமிழ் படங்கள்! அதிரடி லிஸ்ட் இதோ
இத்தனைக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படமும் அன்று தான் வெளியானது. ‘மெர்சல்’ படத்தின் ரீ ரிலீஸ் ஒரு புதிய விஜய் படத்திற்கு இணையாக டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டி இருக்கிறது. தளபதி விஜய் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்த பெருமையை மெர்சல் படம் அவருக்கு பெற்று தந்தது. இயக்குனர் அட்லீயும் தான் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இந்த படத்தில் இறக்கி வைத்து தளபதி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, படம் பார்க்கும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் விருந்தளிக்கும் விதமாக இந்த படத்தை உருவாக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு இதில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.
மற்றும் படத்தில் நடித்த எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், ஹரிஷ் பெராடி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். ஏ ஆர் ரகுமானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது. தளபதி விஜய் அரசியல் கட்சியை துவங்கி விரைவில் தேர்தலிலும் போட்டியிடப் போவதால், தற்போது தான் நடித்து வரும் ஜனநாயகன் படத்தை தனது கடைசி படமாக அறிவித்துவிட்டார். அதனால் விஜய் பல வருடங்களுக்கு முன் நடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படும் போது ஒரு புதிய படத்திற்கு இணையான வரவேற்பு அவரது ரசிகர்களிடம் கிடைத்து வருவது மறுக்க முடியாத உண்மை. மெர்சல் படமும் அப்படி ஒரு மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதை இந்த ஹவுஸ்புல் காட்சிகளே பறை சாற்றுகின்றது.
மேலும் படிக்க | இது தனுஷ்க்கு வித்தியாசமான படம் DSP ஸ்பீச்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ