)
Jana Nayagan vs The Raja Saab Release Date: பிரபாஸ் நடித்துள்ள தி ராஜா சாப் படம் வரும் டிசம்பம் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனநாயகன் படத்துடன் மோதப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காணலாம்.
ஜனநாயகன்:
தமிழ் திரையலகின் டாப் நடிகராக இருப்பவர் விஜய். இவர், தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். நடிகராக மட்டும் இருந்த விஜய், 1 வருடத்திற்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியயை ஆரம்பித்து அரசியல் பயணத்தை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில், முதல்வர் வேட்பாளராக களம் காண இருக்கும் விஜய், அதற்கு முன்னர் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர், ஜனநாயகன். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரங்களாக பிரியாமணி, நரேன், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இதனிடையே ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. ஆனால் இவ்விழா தமிழ்நாட்டில் இல்லை, இந்தியாவிலேயே நடக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் கடைசிப் படமாக கூறப்படும் ஜனநாயகன் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. மேலும் இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தி ராஜா சாப்:
மாருதி என்பவர் இயக்கத்தில் ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ளது படம் தி ராஜா சாப். இந்த படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்போவதாக முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அன்றைய தினம் விஜய்யின் ஜனநாயகன் ரிலீசாக இருக்கிறது.
ஜனநாயகன் vs தி ராஜா சாப்:
இந்நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக பிரபாஸின் தி ராஜா சாப் படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் ரசிகர்களுக்கு இந்த இரண்டு படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி பான் இந்திய அளவில் இந்த படங்களுக்கு இடையில் போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.
#JanaNayagan vs #TheRajaSaab - The Clash is ON..Jan 9, 2026..pic.twitter.com/mECkSoeX9d
— Laxmi Kanth (@iammoviebuff007) August 28, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ