Reason For Nayanthara Prabhu Deva Break Up : பலவித சர்ச்சைகளுக்கு பெயர் பாேன நடிகையாக இருந்தவர், நயன்தாரா. மிக இளம் வயதிலேயே திரையுலகிற்குள் நுழைந்த நயன்தாரா, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், சில ரிலேஷன்ஷிப்புகளில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறார். அப்படி அவர் மாட்டிக்கொள்ள இருந்த ஒரு உறவு குறித்து இங்கு பார்ப்போம்.
நயன்தாரா-பிரபுதேவா உறவு:
கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்த ஒரு உறவு, நயன்தாரா-பிரபுதேவாவின் காதல். திருமணமான பிரபு தேவா, வில்லி திரைப்படத்தை இயக்கிய போது, அதில் நாயகியாக நடித்த நயன்தாராவை காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் டேட்டிங் செய்ததாகவும், இந்த திருமண உறவு திருமணம் வரை செல்ல இருந்ததாகவும் பேசப்பட்டது. ஆனால், சில சம்பவங்களுக்கு பிறகு சற்றே சுதாரித்துக்கொண்ட நயன்தாரா, இந்த உறவை முறித்துக்கொண்டாராம். இதற்கு பின்னால், பிரபு தேவா போட்ட 3 கண்டீஷன்கள் இருக்கிறதாம். அவை என்ன தெரியுமா?
கண்டீஷன் நம்பர் 1:
நயன்தாராவும் பிரபுதேவாவும் தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று நினைத்த போது, பிரபுதேவா முதலாவதாக ஒரு கண்டீஷன் போட்டதாக கூறப்படுகிறது. அதில் முதலாவது, நயன்தாரா அவரது மதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதானாம்.
நயன்தாரா, 2011ஆம் ஆண்டில் தனது மதத்தை மாற்றிக்கொண்டதாகவும் அப்போது செய்திகள் பரவியது. தனது காதலின் ஆழத்தை விளக்கும் வகையில் நயன் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.
கண்டீஷன் நம்பர் 2:
பிரபுதேவா, ராம்லாத் என்பவரை திருமணம் செய்து அவருடன் கிட்டத்தட்ட 16 வருட திருமண வாழ்வில் இருந்தார். இதன் மூலம் அவருக்கு 2 குழந்தைகளும் இருந்தனர். நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள இருந்த சமயத்தில் பிரபுதேவா போட்ட கண்டீஷன்களுள் ஒன்று, திருமணத்திற்கு பிறகு தனது பிள்ளைகள் தன்னுடன்தான் இருப்பார்கள் என்பதுதான். இதனை நயன் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
கண்டீஷன் நம்பர் 3:
பிரபுதேவா சொன்ன அனைத்திற்கும் தலையாட்டிய நயனுக்கு, பயத்தை கொடுத்தது அந்த 3வது கண்டீஷன்தான். இருவருக்கும் திருமணம் ஆன பிறகு சினிமாவில் இருந்து நீ விலகிவிட வேண்டுமென நயன்தாராவிடம் பிரபு கண்டீஷன் போட்டதாக கூறப்படுகிறது. கெரியரில் உச்சத்தில் இருந்த நயனுக்கு, இந்த கண்டீஷனால் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அவர் அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ளவும் இல்லை என கூறப்படுகிறது. இதனால், இருவருக்குள்ளும் அவ்வளவு பிரச்சனை ஏற்பட்டதாம். இது பிரேக்-அப்பிலும் முடிந்திருக்கிறது.
இது குறித்து, நயன்தாராவின் திருமண டாக்குமென்ட்ரியிலும் பேசப்பட்டது. அதில் பிரபுதேவாவின் பெயரை சொல்லாமல், தன்னை அவர் திரையுலகில் இருந்து விலக சொன்னதாக கூறியிருப்பார் நயன். 2011ல் வெளியான ஸ்ரீ ராம ராஜ்யம் திரைப்படம்தான் நயன்தாராவின் கடைசி படம் என்று கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகு பெரிய பிரேக் எடுத்து, கம்-பேக் கொடுத்து கலக்கினார். 2022ல், விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன் இப்போது இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக் உடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
மேலும் படிக்க | 2வது மனைவி சோபிதாவிற்கு நாக சைதன்யா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?
மேலும் படிக்க | Aishwarya Arjun : புது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









