Things To Watch Out In Good Bad Ugly Trailer : இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக இருக்கிறது, குட் பேட் அக்லி. இந்த படத்தில், அஜித் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். இதன் டிரைலர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில், கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
குட் பேட் அக்லி டிரைலர்:
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் நேற்று இரவு 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிரைலர் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் டென்ஷனானலும் அஜித்திற்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டனர். இறுதியில் டிரைலரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வீணடிக்காமல் மாஸாக இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி இருக்கிறது.
படத்தில் ‘இந்த’ நடிகரா?
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்குமாரின் வெறித்தனமான ரசிகர் என்பதால் குட் பேட் அக்லி படம் கண்டிப்பாக Fanboy சம்பவமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். படத்தின் டிரைலர் கட் அனைத்தும் பார்ப்பதற்கு அற்புதமாக இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். இதில் ஒரு பிரபல நடிகர் இருப்பதையும் ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர் வேறுயாருமில்லை, ஜாக்கி ஷ்ராப்ஃதான்.

பாலிவுட்டில் பெரிய நடிகராக விளங்கும் இவர், பிகில் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஜெயிலர் படத்திலும் காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த பிரபலங்களுள் ஒருவராக இருந்தார். இவர், குட் பேட் அக்லி படத்தில் இருப்பது அனைவருக்குமே பெரிய சர்ப்ரைஸ்தான்.
சிம்ரனும் இருக்காங்க..
தமிழ் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட ஜோடி, சிமர்ன்-அஜித். இவர்கள் இருவரும் வாலி, அவள் வருவாளா, உன்னை கொடு என்னை தருவேன் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்திருக்கின்றனர். சிம்ரன், தனக்கு திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு திரையுலகில் பெரிதும் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இப்போது முக்கிய கதாப்பாத்திரங்களில்தான் நடித்து வருகிறார். இப்போது, 25 வருடங்களுக்கு பிறகு சிம்ரனும் அஜித்தும் ஒரே ஸ்கிரீனில் தாேன்ற இருக்கின்றனர். டிரைலரில் “ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஐ மிஸ் யூ” என்று சொல்லும் காட்சி இடம் பெற்றிருக்கிறது.
முந்தைய படங்களில் இடம் பெற்றிருந்த டைலாக்..
குட் பேட் அக்லி படத்தில், அஜித்தின் முந்தைய படங்களில் ஹிட் ஆன சில டைலாக்குகளும் இடம் பெற்றிருக்கின்றன. அதிலும் “உன் உடம்புல கை இருக்கும், கால் இருக்கும், தல இருக்கும். ஆனா உயிர் மட்டும் இருக்காது” என்ற டைலாக்கும் இடம் பெற்றிருக்கிறது. அதே போல, அஜித் மங்காத்தா திரைப்படத்தில் பேசிய “It’s my f*ing game” என்று பேசிய டைலாக்கை, இதில் அர்ஜுன் தாஸ் பேசுகிறார். இப்படி, அஜித்தின் ஏராளமான தக் தருணங்கள் டிரைலரில் இருக்கிறது.
ஹிட் ஆகுமா?
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் தோல்விக்கு பிறகு வெளியாக இருக்கும் படம், குட் பேட் அக்லி படமாகும். இந்த படம், அஜித்தின் திரை வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான படமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் கார்டு முதல், க்ளைமேக்ஸ் வரை அனைத்தும் மாஸாக இருக்கும் என்றும் ரசிகர்கள் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். இப்படம், அஜித்திற்கு கைக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். படம், வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தில் அஜித் டபுள் ஆக்ஷன்?! ட்ரைலரில் ‘இதை’ கவனிச்சீங்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









